இந்திய தேஜாஸிற்கு ரேடோம்களை சப்ளை செய்ய உள்ள பிரிட்டிஷ் நிறுவனம் !!

  • Tamil Defense
  • January 5, 2022
  • Comments Off on இந்திய தேஜாஸிற்கு ரேடோம்களை சப்ளை செய்ய உள்ள பிரிட்டிஷ் நிறுவனம் !!

இந்தியா சொந்தமாக உள்நாட்டிலேயே தயாரித்த இலகுரக தேஜாஸ் போர் விமானத்திற்கான ரேடோம்களை மெக்கிட் ஏரோஸ்பேஸ் எனும் பிரிட்டிஷ் நிறுவனம் வழங்க உள்ளது.

இதற்கான ஒப்பந்தத்தை நமது விமான மேம்பாட்டு முகமை மெக்கிட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்திற்கு வழங்கி உள்ளது, இந்த ரேடோம்கள் என்பது ஒரு விமானத்தின் மூக்கு பகுதியாகும் இதற்குள் தான் ரேடார் பொருத்தப்படும்.

ஒப்பந்தத்தின் படி மெக்கிட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் காம்போஸிட் மெட்டீரியலால் செய்யப்பட்ட இரண்டு ரேடோம்களை தயாரித்து வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ரேடோம்களை தேஜாஸ் மார்க்-2 விமானங்களில் பயன்படுத்த உள்ளோம் இது தேஜாஸ் மார்க்-1 விமானத்தின் ரேடோமை விடவும் 10 சதவிகிதம் சிறியதாகும்.

இதன் காரணமாக தேஜாஸ் மார்க்-2 போர் விமானமானது ரேடாரில் இன்னும் சிறியதாகவும், அதனுடைய காற்று எதிர்ப்பு பரப்பளவு மேலும் சிறியதாகவும் இருக்கும்.

ஏற்கனவே தேஜாஸ் மார்க் -1 போர் விமானத்திற்கு பிரிட்டிஷ் நிறுவனமான கோபாம் க்வார்ட்ஸ் மெட்டீரியலால் ஆன ரேடோம்களை தயாரித்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.