மீண்டும் இந்தியாவிடம் இருந்து 2 பிரம்மாஸ் அமைப்புகளை நிதி ஒதுக்க உள்ள ஃபிலிப்பைன்ஸ் அரசு !!

  • Tamil Defense
  • January 4, 2022
  • Comments Off on மீண்டும் இந்தியாவிடம் இருந்து 2 பிரம்மாஸ் அமைப்புகளை நிதி ஒதுக்க உள்ள ஃபிலிப்பைன்ஸ் அரசு !!

ஏற்கனவே ஃபிலிப்பைன்ஸ் அரசு அந்நாட்டு கடற்படைக்காக இந்தியாவிடம் இருந்து 3 பிரம்மாஸ் ஏவுகணை அமைப்புகளை வாங்க முதல்கட்டமாக 15% நிதியை ஒதுக்கீடு செய்ததை அறிவோம்.

இந்த நிலையில் ஃபிலிப்பைன்ஸ் அரசு மீண்டும் இரண்டு பிரம்மாஸ் ஏவுகணை அமைப்புகளை இந்தியாவிடம் இருந்து அந்நாட்டு தரைப்படைக்காக வாங்க நிதி ஒதுக்கீடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்காக முதல்கட்டமாக இரண்டு பிரம்மாஸ் ஏவுகணை அமைப்புகளின் ஒட்டுமொத்த மதிப்பில் 15 சதவிகித அளவிலான நிதியை அந்நாட்டு அரசு ஒதுக்கீடு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தங்களால் மேலதிக வான் கப்பல் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து ஏவப்படும் பிரம்மாஸ் ஏவுகணைகளை ஃபிலிப்பைன்ஸ் வாங்குவதற்கான வாய்ப்புகளை கணிசமாங அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

தற்போது ஃபிலிப்பைன்ஸ் நாட்டிடம் பிரம்மாஸ்- NG ரக ஏவுகணையை சுமக்கும் திறன் கொண்ட போர் விமானங்கள் ஏதும் இல்லை மேலும் நீண்ட காலமாகவே போர் விமானங்ஙளை வாங்கவும் அந்நாடு முயற்சி செய்து வருகிறது.

அந்த வகையில் தற்போது தென் கொரிய FA-50 ரக போர் விமானம் இந்த போட்டியில் முன்னனியில் உள்ளது ஆனால் இதனுடன் பிரம்மாஸ் ஏவுகணையை இணைக்கும் பணி அதிக காலம் எடுக்கும் அதிக பணம் தேவைப்படும் பணியாகும்.

ஆனால் தேஜாஸில் எளிதாக பிரம்மாஸ் ஏவுகணைகளை பொருத்தி கொள்ள முடியும் ஆகவே ஒன்று அல்லது இரண்டு படையணி தேஜாஸ் விமானங்களை வாங்குவது ஃபிலிப்பைன்ஸ் அரசுக்கு நல்ல தேர்வாக அமையும் என்பதில் ஐயமில்லை.