மியான்மர் எல்லையில் பயங்கர ஆயுதங்களை கைப்பற்றிய அஸ்ஸாம் ரைபிள்ஸ்

  • Tamil Defense
  • January 2, 2022
  • Comments Off on மியான்மர் எல்லையில் பயங்கர ஆயுதங்களை கைப்பற்றிய அஸ்ஸாம் ரைபிள்ஸ்

மியான்மர் எல்லை அருகே மிசோரம் மாநிலத்தில் மிசோரம் காவல் துறை மற்றும் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படைப் பிரிவு இணைந்து பயங்கர ஆயுதங்களை கைப்பற்றியுள்ளது.

குறிப்பிட்ட உளவுத் தகவலின் அடிப்படையில் மஹ்ரே என்னுமிடத்தில் இரு படைகளும் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தின.

இந்த தேடுதல் வேட்டையில் 395 kg ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 81 kg திரவ வெடிபொருள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

81 kgs திரவ வெடிபொருள், 94 kgs பெலோக்ஸ் கிரானுரல் வெடிபொருள், 395 kgs ஜெலட்டின், 356 ரவுண்ட் 12 gauge 70 mm cartridges, 1 கண்ணிவெடி (IED) ஆகிய மற்ற பொருள்களும் கைப்பற்றப்பட்டன.