புதிய சண்டை சீருடையால் ஏற்பட்டுள்ள சர்ச்சையும் மோதலும் !!

  • Tamil Defense
  • January 21, 2022
  • Comments Off on புதிய சண்டை சீருடையால் ஏற்பட்டுள்ள சர்ச்சையும் மோதலும் !!

சமீபத்தில் தரைப்படை தினமன்று இந்திய தரைப்படைக்கான புதிய டிஜிடல் சீருடை அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் விரைவில் இவற்றை அனைத்து படை வீரர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தேசிய ஃபேஷன் டெக்னாலஜி கல்லூரியால் வடிவமைக்கப்பட்ட இந்த சீருடையை உயர் தரத்துடனும் தகுந்த விலையிலும் தயாரித்து தரும் நிறுவனங்களை அடையாளம் காண டென்டர் விடப்பட்டுள்ளது.

அதாவது யார் வேண்டுமானாலும் இதில் பங்கேற்க முடியும் ஆகவே அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்த நடவடிக்கையை எதிர்த்து தேசிய பாதுகாப்புதுறை பணியாளர்கள் சம்மேளனம் ஆர்டரை நேரடியாக பாதுகாப்பு துறையின் TCF நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என கூறியுள்ளனர்.

இந்த ஆர்டரை வழங்கவில்லை என்றால் OCF ஆவடி, OCF ஷாஜஹான்பூர் மற்றும் OCF ஹஸ்ரத்பூர் ஆகிய தொழிற்சாலைகள் நஷ்டத்தை சந்திக்கும் என கூறியுள்ளனர் இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சரையும் சந்தித்து உள்ளனர்.

ஆனால் ராணுவமோ ஏற்கனவே TCFன் OCF தொழிற்சாலைகளுக்கு ஏகப்பட்ட ஆர்டர்கள் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் அதற்கான டெலிவரிகளே கால தாமதம் ஆகியுள்ளதாகவும் டென்டரில் இவர்களும் பங்கேற்கலாம் எனவும் கூறியுள்ளது.