சம்பூர்னானந்த் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் மத போதகர் பட்ட படிப்பு செல்லாது என நிராகரித்த ராணுவம் கொதிக்கும் மாணவர்கள் !!

  • Tamil Defense
  • January 9, 2022
  • Comments Off on சம்பூர்னானந்த் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் மத போதகர் பட்ட படிப்பு செல்லாது என நிராகரித்த ராணுவம் கொதிக்கும் மாணவர்கள் !!

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ள சம்பூரனானந்த் சமஸ்கிருத பல்கலைகழகம் இந்து மத பண்டிதர்களுக்கானபட்ட படிப்புகளை வழங்கி வருகிறது.

சமீபத்தில் இந்திய ராணுவம் பண்டிட், பண்டிட் கோர்க்கா, கிராந்தி, மெளலவி, போதகர், புத்த பிக்குகளுக்கான ஆட்தேர்வுக்கு விண்ணபங்களை வெளியிட்டது.

அப்போது சம்பூர்னானந்த் சமஸ்கிருத பல்கலை கழக மாணவர்கள் விண்ணப்பித்து எழுத்து தேர்வு, மருத்துவ தேர்வு ஆகியவற்றை நிறைவு செய்து காத்திருந்த நிலையில் இந்திய ராணுவம் இப்பல்கலைகழகத்தின் படிப்பை பட்டபடிப்பாக கருத முடியாது என கூறி நிராகரித்தது.

இதையடுத்து அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் பிரதமர் அலுவலகம் வரை நடை பயணமாக சென்று பிரதமர் அலுவலகத்தின் மக்கள் தொடர்பு பிரிவில் மனு கொடுத்தனர், பல்கலை கழக துணை வேந்தரும் ராணுவ தளபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேச உள்ளார் மேலும் இனி சான்றிதழ்களில் பி.ஏ என்ற குறியீடு அச்சிடப்படும் எனவும் தெரிவித்தார்.