சுவீடனிடம் இருந்து ஒற்றை முறை பயன்படுத்தக்கூடிய டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் !!
1 min read

சுவீடனிடம் இருந்து ஒற்றை முறை பயன்படுத்தக்கூடிய டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் !!

சுவீடன் நாட்டை சேர்ந்த சாப் நிறுவனம் தயாரிக்கக்கூடிய AT-4 எனப்படும் ஒரே ஒரு முறை மட்டுமே பயன்படுத்த கூடிய டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை இந்திய தரைப்படை மற்றும் விமானப்படைகளுக்கு வாங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த ஒப்பந்தம் சாப் நிறுவனத்தின் ஒரு பிரிவான FFV ORDNANCE AB மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் இடையே கையெழுத்தாகி உள்ளது, ஏற்கனவே நாம் சாப் நிறுவனத்தின் கார்ல் குஸ்தாவ் ராக்கெட் லாஞ்சர்களை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த AT-4 ஆயுத அமைப்பை தாழ்வாக பறக்கும் ஹெலிகாப்டர்கள், டாங்கிகள், கவச வாகனங்கள், பங்கர்கள், கட்டிடங்கள் என பல்வேறு வகையான இலக்குகளையும் தாக்கி அழிக்க பயன்படுத்தி கொள்ள முடியும் என்பது இதன் சிறப்பாகும்.