இந்திய கடற்படைக்கு நீர்மூழ்கி எதிர்ப்பு அமைப்பை தயாரிக்க இணையும் இரண்டு தனியார் நிறுவனங்கள் !!

  • Tamil Defense
  • January 14, 2022
  • Comments Off on இந்திய கடற்படைக்கு நீர்மூழ்கி எதிர்ப்பு அமைப்பை தயாரிக்க இணையும் இரண்டு தனியார் நிறுவனங்கள் !!

இந்திய கடற்படைக்கான ஒருங்கிணைந்த நீர்மூழ்கி எதிர்ப்பு போரியல் அமைப்பை உருவாக்க இங்கிலாந்தின் அல்ட்ரா எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் இந்தியாவின் மஹிந்திரா டிஃபென்ஸ் ஆகியவை கைகோர்த்துள்ளன.

இதுபற்றி அல்ட்ரா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் சைமன் ப்ரைஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்திய கடற்படையின் நீர்மூழ்கி எதிர்ப்பு திறன்களை வலுப்படுத்துவதில் மிகழ்ச்சி அடைகிறோம் என கூறியுள்ளார்.

மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்திய கடற்படை தனியார் துறைக்கு வழங்கிய மிக முக்கியமான ஒப்பந்தம் எனவும் இதனை தங்களது நிறுவனம் எதிர்நோக்கி உள்ளதாகவும் கூறியுள்ளது.

இந்த அமைப்பானது பல்வேறு வகையான சென்சார்கள், இழுவை சென்சார்கள், நீரடிகணைகள், அடையாளம் காணும் அமைப்பு போன்றவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த அமைப்பாகும்.

சுமார் 60 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தின் டெலிவரி 2024ஆம் ஆண்டு தொடங்கி 2030ஆம் ஆண்டு நிறைவடையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.