மியான்மரில் 10 கிலோமீட்டர் புகுந்து சிறப்பு படை மீண்டும் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் !!

கடந்த செப்டம்பர் மாதம் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையின் கட்டளை அதிகாரி அவரது மனைவி மகன் மற்றும் 4 வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்தி கொன்றனர்.

இதை தொடர்ந்து இதற்கு பொறுப்பான மணிப்பூரின் மக்கள் விடுதலை ராணுவத்தை பழிவாங்க இந்திய தரைப்படை தீவிர முயற்சி எடுத்து வந்தது.

இந்த நிலையில் இன்று அதிகாலை பாரா சிறப்பு படை வீரர்கள் மியான்மருக்குள் 10 கிலோமீட்டர் புகுந்து சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தாக்குதல் நடத்தினர்.

இதில் நோங்தோம்பா மற்றும் லேய்ச்சில் ஆகிய இரண்டு பயங்கரவாதிகளின் கொல்லப்பட்ட நிலையில் ஒரு பாரா சிறப்பு படை வீரரும் வீரமரணம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மியான்மரின் சீனாம் கிராமத்திற்கு அருகே உள்ள பயங்கரவாத முகாம் மீது அதிகாலை 4.30 மணிக்கு துவங்கிய தாக்குதல் காலை 11 மணிவரை நடைபெற்றது.

இந்த தாக்குதலின் முழு விவரங்களை இந்திய தரைப்படை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டால் தான் முழு விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.