உக்ரேனை தாக்கினால்…புதினுக்கு பிடன் கடுமையான எச்சரிக்கை

உக்ரேனை தாக்கி ஊடுருவினால் இரஷ்யா அதற்கு தகுந்த பதில் அளிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் பிடன் இரஷ்ய அதிபர் புதினுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

உக்ரேனை ஊடுருவி தாக்கினால் அது இரஷ்யாவிற்கு பேரழிவை தரும் என அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தனது எச்சரிக்கையில் கூறியுள்ளார்.

எங்களது கூட்டாளிகள் மற்றும் நேச நாடுகள் இரஷ்யாவை கடுமையான காயப்படுத்த தயாராக உள்ளனர் எனவும் இரஷ்ய பொருளாதாரம் பாதிக்கும் அளவுக்கு கடுமையான பதிலடிகள் வழங்கப்படும் எனவும் அதிபர் பிடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது உக்ரேன் சார்பில் படைகள் தயாராக உள்ளன.இங்கிலாந்து அதிக அளவு டேங்க் எதிர்ப்பு ஏவுகணைகளை உக்ரேனுக்கு வழங்கி வருகிறது.கனடா தனது சிறப்பு படையை உக்ரேனுக்கு அனுப்பியுள்ளது.

மறுபுறம் இரஷ்யா தனது படைப்பிரிவுகளை உக்ரேன் எல்லைக்கு அனுப்பி வருகிறது.இஸ்கந்தர் ஏவுகணை படையணிகள்,கவச வாகனப்படைப்பிரிவுகள் எல்லை நோக்கி நகர்வதை காண முடிகிறது.மற்றும் இரஷ்யா போர்பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறது.