முக்கியமான அமெரிக்க ஆயுதங்கள் உக்ரைன் சென்றடைந்தது ரஷ்யாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை !!

  • Tamil Defense
  • January 23, 2022
  • Comments Off on முக்கியமான அமெரிக்க ஆயுதங்கள் உக்ரைன் சென்றடைந்தது ரஷ்யாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை !!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே பதட்டம் நிலவி வரும் சூழலில் அமெரிக்கா மிகவும் முக்கியமான ஆயுத அமைப்புகளை உக்ரைனுக்கு உதவும் பொருட்டு அனுப்பி வைத்தது.

அந்த வகையில் சுமார் 90 டன்கள் அளவிலான உக்ரைன் தலைநகர் கியெவ் விமான நிலையத்தை சென்றடைந்த நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆந்தணி ப்ளிங்கென் ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதை போல உக்ரைனுக்கான அமெரிக்க ஆயுத உதவிகள் தொடர்ந்து நடைபெறும் என உக்ரைனில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

கடந்த டிசம்பர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சுமார் 200 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத உதவிகளை உக்ரைனுக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.