சீனாவுக்கு எதிராக ஐந்து எஸ்-400 அமைப்புகளும் நிலை நிறுத்தப்படும் !!

  • Tamil Defense
  • January 19, 2022
  • Comments Off on சீனாவுக்கு எதிராக ஐந்து எஸ்-400 அமைப்புகளும் நிலை நிறுத்தப்படும் !!

இந்தியா சுமார் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஐந்து எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்க ஒப்பந்தம் செய்துள்ள நிலையில்

தற்போது இரண்டு அமைப்புகள் இந்தியா வந்து சேர்ந்துள்ளன அவற்றில் முதலாவது அமைப்பு இந்திய விமானப்படையால் பஞ்சாபில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது.

இரண்டாவது அமைப்பு நிலைநிறுத்தப்படும் இடம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள நிலையில் முதலாவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பானது ஏப்ரல் மாதம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என தெரிகிறது.

இந்த ஐந்து எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகளும் சீனாவுக்கு எதிராக செயல்படும் என பாதுகாப்பு அமைச்சகத்தை சேர்ந்த மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.