மணிப்பூரில் ஆயுதப் படைகள் சிறப்பு சட்டம் அமலில் இருக்கும் காலம் நீட்டிப்பு

  • Tamil Defense
  • January 13, 2022
  • Comments Off on மணிப்பூரில் ஆயுதப் படைகள் சிறப்பு சட்டம் அமலில் இருக்கும் காலம் நீட்டிப்பு

மணிப்பூரில் ஆயுதப்படைப்படைகளுக்கான சிறப்பு சட்டத்தை நீக்க வேண்டும் என்ற குரல்கள் மேலோங்கி வரும் நேரத்தில் இந்த சட்டத்தை மேலும் ஒரு வருடத்திற்கு மனிப்பூர் அரசு நீட்டித்துள்ளது.இம்பால் முனிசிபர் ஏரியா தவிர மாநிலத்தின் அனைத்து பகுதிக்கும் இது பொருந்தும் என மனிப்பூர் அரசு தெரிவித்துள்ளது.

மாநிலம் முழுவதும் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில் மாநில பாதுகாப்பு படைகளுக்கும் மக்களுக்கும் உதவி செய்து அமைதியை நிலைநாட்ட இந்த சட்டம் தேவை என மணிப்பூருக்கான சிறப்பு செயலர் ஜியன் பிரகாஷ் கூறியுள்ளார்.

மணிப்பூரில் சில நாட்களுக்கு முன் சிவிலியன்கள் உயிரிழப்புக்கு பின் இந்த சட்டத்தை நீக்க போராட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.