பாகிஸ்தான் ஆஃப்கன் எல்லையோரம் அமைத்த வேலியை உடைத்த தாலிபான்கள் !!

  • Tamil Defense
  • January 3, 2022
  • Comments Off on பாகிஸ்தான் ஆஃப்கன் எல்லையோரம் அமைத்த வேலியை உடைத்த தாலிபான்கள் !!

ஆஃப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையிலான எல்லை பகுதியில் குறிப்பாக ஆஃப்கானிஸ்தானுடைய நங்கர்ஹார் மாகாணத்தில் அமைந்துள்ள எல்லை பகுதியில் எல்லை பிரச்சனை தீவிரமடைந்து வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் தாலிபான்கள் நங்கர்ஹார் மாகாண பகுதியில் பாகிஸ்தான் அமைத்த எல்லையோர கம்பி வேலிகளை லாரி கொண்டு இடித்து அகற்றும் காணொளி ஒன்று வெளியாகி உள்ளது.

இதுபற்றி அறிக்கை வெளியிட்டுள்ள ஆஃகன் பாதுகாப்பு அமைச்சகம் எல்லையில் வேலி அமைக்க பாகிஸ்தானுக்கு எவ்வித உரிமையும் இல்லை தொடர்ந்து இதனை தடுப்போம் என கூறி உள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் தாலிபான்கள் நிம்ரோஸ் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அமைத்து வந்த எல்லை காவல் சாவடி மற்றும் வேலிகளை அடித்து நொறுக்கியது குறிப்பிடத்தக்கது.

எது எப்படியோ ஆட்சி அமைக்க உதவிய பாகிஸ்தானுக்கே தாலிபான்கள் தண்ணி காட்டி வருவது பாம்புக்கு பால் வாரத்த கதையாக மாறி உள்ளது என கூறப்படுகிறது.