சரக்கு விமானம் போல் சென்று பாகிஸ்தானில் குண்டு மழை பொழிந்த ரஷ்ய போர் விமானங்கள் !!

  • Tamil Defense
  • January 11, 2022
  • Comments Off on சரக்கு விமானம் போல் சென்று பாகிஸ்தானில் குண்டு மழை பொழிந்த ரஷ்ய போர் விமானங்கள் !!

சோவியத் ஒன்றிய தயாரிப்பான சுகோய்-25 க்ராச் (நேட்டோ பெயர் – ஃப்ராக்பூட்) போர் விமானங்கள் பாகிஸ்தானில் குண்டு மழை பொழிந்த சுவாரஸ்யமான கதை தான் இது.

1986ஆம் ஆண்டு சோவியத் படைகள் ஆஃப்கானிஸ்தானில் முகாமிட்டு இருந்து காலகட்டத்தில் பாகிஸ்தானில் உள்ள முஜாஹீதின் பயிற்சி முகாம்களை தாக்கி அழிக்க முடிவு செய்யபட்டது.

இதனையடுத்து பக்ரம் விமானப்படை தளத்தில் இருந்து கேப்டன் கோஷ்கின் தலைமையில் 4 சுகோய்-25 போர் விமானங்கள் புறப்பட்டு ஒரு சரக்கு விமானத்தை போல பறந்தன.

இப்படி பாகிஸ்தான் நாட்டின் கண்காணிப்பு ரேடார்களில் தெரிவதன் மூலமாக ஏமாற்றி பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவி செல்வது தான் அவர்களின் நோக்கம் ஆகும்.

பாகிஸ்தான் எல்லைக்கு சற்றே அருகில் உள்ள ஜலாலாபாத் அருகே வந்த போது ஒரு விமானம் மட்டும் தனியாக பிரிந்து சென்று அங்குள்ள விமான நிலையத்தில் தரை இறங்கியது மற்றும் மூன்று விமானங்களும் மிகவும் தாழ்வாக பறக்க துவங்கின.

இதனால் சரக்கு விமானம் ஆஃப்கானிஸ்தானில் உள்ள ஜலாலாபாத் விமான நிலையத்தில் தரை இறங்கியதாக நம்பிய பாகிஸ்தானியர்களால் 160 அடி உயரத்தில் பறக்கும் மற்ற மூன்று விமானங்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த மூன்று விமானங்களும் இலக்கை நெருங்கி வெற்றிகரமாக மூன்று முறை தாக்குதல் நடத்தின அப்போது எவ்வித வான்பாதுகாப்பு துப்பாக்கி தாக்குதல்களும் நடைபெறவில்லை.

முதல்முறை குண்டுகளை வீசியும் இரண்டாவது முறை ராக்கெட்டுகளை ஏவியும் மூன்றாவது முறை 30மில்லிமீட்டர் இயந்திர துப்பாக்கிகளை கொண்டு சுட்டும் தாக்குதல் நடத்தி முகாமை துவம்சம் செய்து விட்டு ஆப்கானிஸ்தான் திரும்பின.

இந்த தகவல்கள் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட ஷ்துர்மோவிக் எனும் கேப்டன் கோஷ்கின் உடைய புத்தகத்தில் அவர் வெளிப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.