
நாட்டின் 73 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு எல்லை பாதுகாப்பு படையின் 53 வீரர்களுக்கு வீர தீரத்திற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
2 வீரர்களுக்கு வீர தீரத்திற்கான காவலர் விருதுகளும், 5 வீரர்களுக்கு ஜனாதிபதியின் காவலர் விருதுகளும், 46 வீரர்களுக்கு சிறந்த சேவைக்கான காவலர் விருதுகளும் வழங்கப்பட்டு உள்ளன.
கான்ஸ்டபிள் ஆனந்த் ஒரான் மற்றும் கான்ஸ்டபிள் சுந்தர் சிங் ஆகியோருக்கு வங்கதேச எல்லையோரம் கடத்தலை தடுப்பதில் வீர தீரத்துடன் செயல்பட்டதற்காக வீர தீரத்திற்கான காவலர் விருது வழங்கப்பட்டுள்ளது.
கடத்தல்காரர்களுடன் மோதியதில் கான்ஸ்டபிள் சுந்தர் சிங் படுகாயமடைந்தும் கடத்தல்காரனை மடக்கி பிடித்தார்.
கான்ஸ்டபிள் ஆனந்த் ஒரான் ஒற்றை ஆளாக 6 போதை பொருள் கடத்தல் காரர்களுடன் சண்டையிட்டு ஒருவனை மடக்கி பிடித்து கைது செய்தார்.
அதை போல இரண்டாவது கட்டளை அதிகாரி டெபுட்டி கமாண்டன்ட் வருணேந்திர பிரதாப் சிங்கிற்கு சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் பஞ்சாப் குஜராத் என பாகிஸ்தான் எல்லையோரம் உள்ள முக்கிய எல்லைகளிலும் ஜம்முவிலும் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர் தற்போது BSF உளவு பிரிவில் பணியாற்றி வருகிறார்.