Day: January 27, 2022

குடியரசு தினத்தை முன்னிட்டு இனிப்புகளை பரிமாறி கொண்ட இந்திய பாக் வீரர்கள் !!

January 27, 2022

நேற்று நாட்டின் 73ஆவது குடியரசு தினம் கோலாகலமாக தலைநகர் தில்லியில் பிரமாண்ட ராணுவ மற்றும் கலாச்சார அணிவகுப்புடன் கொண்டாப்பட்டது. இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் அட்டாரி வாகா எல்லை சாவடியோரம் இந்தியாவின் எல்லை பாதுகாப்பு படை மற்றும் பாகிஸ்தானுடைய பஞ்சாப் ரேஞ்சர்கள் இனிப்புகளை பரிமாறி கொண்டனர். இதனை தொடர்ந்து இரு தரப்பு அதிகாரிகள் மற்றும் வீரர்கள் புகைப்படம் எடுத்து கொண்டு பரஸ்பரம் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டு விடை பெற்றனர்.

Read More

ஒரு சீன கப்பல் மற்றும் 10 இங்கிலாந்து தயாரிப்பு ஹெலிகாப்டர்களை படையில் இணைத்த பாக் !!

January 27, 2022

பாகிஸ்தான் கடற்படையானது நேற்று முன்தினம் கராச்சியில் உள்ள கடற்படை தளத்தில் நடைபெற்ற விழாவில் 1 போர் கப்பல் மற்றும் 10 ஹெலிகாப்டர்களை படையில் இணைத்தது. பி.என்.எஸ். துக்ரில் எனப்படும் அந்த கப்பல் டைப்-054ஏ ரக ஃப்ரிகேட் ஆகும் மேலும் இது சீன தயாரிப்பு கப்பல் என்பதும் இத்தகைய நான்கு கப்பல்களை சீனா பெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதை போலவே கத்தார் விமானப்படை பயன்படுத்தி வந்த 10 இங்கிலாந்து தயாரிப்பு வெஸ்ட்லேண்ட் சீ கிங் ரக ஹெலிகாப்டர்களையும் படையில் […]

Read More

13ஆண்டுகள் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்று ஒய்வு பெற்ற ராணுவ குதிரை விடை கொடுத்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் !!

January 27, 2022

ஜனாதிபதியின் பாதுகாவலர்கள் ரெஜிமென்ட்டில் சேவை புரிந்த விராட் எனும் குதிரை நேற்றுடன் ராணுவ சேவையில் இருந்து ஒய்வு பெற்றது. சுமார் 13 ஆண்டுகள் தொடர்ந்து குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற இந்த குதிரை அந்த ரெஜிமென்ட்டிலேயே நம்பகத்தன்மை அதிகமான குதிரை என கூறப்படுகிறது. மேலும் விராட்டின் நீண்ட கால சேவையை பாராட்டி ராணுவ தளபதி பாராட்டு அட்டையை வழங்கி கவுரவித்தார் இந்த சிறப்பை பெறும் முதல் குதிரை விராட் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

குடியரசு தினத்தை முன்னிட்டு 53 BSF வீரர்களுக்கு வீர தீர விருதுகள் அறிவிப்பு !!

January 27, 2022

நாட்டின் 73 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு எல்லை பாதுகாப்பு படையின் 53 வீரர்களுக்கு வீர தீரத்திற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2 வீரர்களுக்கு வீர தீரத்திற்கான காவலர் விருதுகளும், 5 வீரர்களுக்கு ஜனாதிபதியின் காவலர் விருதுகளும், 46 வீரர்களுக்கு சிறந்த சேவைக்கான காவலர் விருதுகளும் வழங்கப்பட்டு உள்ளன. கான்ஸ்டபிள் ஆனந்த் ஒரான் மற்றும் கான்ஸ்டபிள் சுந்தர் சிங் ஆகியோருக்கு வங்கதேச எல்லையோரம் கடத்தலை தடுப்பதில் வீர தீரத்துடன் செயல்பட்டதற்காக வீர தீரத்திற்கான காவலர் விருது வழங்கப்பட்டுள்ளது. கடத்தல்காரர்களுடன் […]

Read More

வடக்கு கிழக்கு ராணுவ கட்டளையகங்களுக்கு புதிய தளபதிகள் நியமனம் !!

January 27, 2022

கிழக்கு ராணுவத்தின் தளபதியாக இருந்த லெஃப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே இந்திய தரைப்படையின் துணை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆகவே கிழக்கு ராணுவத்தின் தளபதியாக லெஃப்டினன்ட் ஜெனரல் ஆர் பி காலிதா நியமிக்கப்பட்டுள்ளார். அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த இவர் வடகிழக்கு பகுதியில் இருந்து ராணுவ கமான்டராகும் இரண்டாவது அதிகாரி ஆவார் இதற்கு முன்னர் மணிப்பூரை சேர்ந்த லெஃப்டினன்ட் ஜெனரல் கே ஹெச் சிங் இத்தகைய பொறுப்பு வகித்தார். அதை போல கார்கில் போரில் பங்கேற்ற அனுபவம் கொண்ட வடக்கு […]

Read More

மூன்றே மாதங்களில் ஐந்து செயற்கைகோள்கள் ஏவப்படும் இஸ்ரோ தலைவர் !!

January 27, 2022

இஸ்ரோ தலைவர் முனைவர் சோம்நாத் சமீபத்தில் அதன் தலைவராக பொறுப்பேற்றதை தொடர்ந்து ககன்யான் திட்ட பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. மேலும் மூத்த விண்வெளி விஞ்ஞானிகள் கூறும்போது அடுத்த மூன்றே மாதங்களில் இஸ்ரோ அமைப்பானது ஐந்து வெவ்வேறு விதமான செயற்கைகோள்களை ஏவ உள்ளதாக தெரிவித்தனர். சமீபத்தில் இந்த பணிகள் குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஜிதேந்திர சிங்கை சந்தித்து ஏற்பாடுகள் குறித்து விளக்கியுள்ளார். ஃபெப்ரவரியில் PSLV C52 ராக்கெட் முலம் RICAT […]

Read More