Day: January 21, 2022

சுவீடனிடம் இருந்து ஒற்றை முறை பயன்படுத்தக்கூடிய டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் !!

January 21, 2022

சுவீடன் நாட்டை சேர்ந்த சாப் நிறுவனம் தயாரிக்கக்கூடிய AT-4 எனப்படும் ஒரே ஒரு முறை மட்டுமே பயன்படுத்த கூடிய டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை இந்திய தரைப்படை மற்றும் விமானப்படைகளுக்கு வாங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த ஒப்பந்தம் சாப் நிறுவனத்தின் ஒரு பிரிவான FFV ORDNANCE AB மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் இடையே கையெழுத்தாகி உள்ளது, ஏற்கனவே நாம் சாப் நிறுவனத்தின் கார்ல் குஸ்தாவ் ராக்கெட் லாஞ்சர்களை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த AT-4 ஆயுத […]

Read More

அமெரிக்க போர்கப்பலை பின்தொடர்ந்த சீன கடற்படை மற்றும் விமானப்படை !!

January 21, 2022

தென் சீன கடல் பகுதியில் ரோந்து சென்ற அமெரிக்க கடற்படையின் ஆர்லெய் பர்க் ரக நாசகாரி கப்பலான USS BENFOLD சீன கடற்படை மற்றும் விமானப்படையால் பின் தொடரப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட அமெரிக்க கடற்படையின் கப்பல் தங்களது நாட்டு எல்லையிலிருந்து வெளியேறுமாறு சீன கடற்படை வற்புறுத்திய நிலையில் சீன கடற்படை மற்றும் விமானப்படை பின் தொடர்ந்து கப்பலை வெளியேற்றியதாக கூறியுள்ளது. அமெரிக்க கடற்படையின் ஏழாவது படையணி இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் எங்களது கப்பல் தொடர்ந்து அங்கு ரோந்து பணியில் […]

Read More

புதிய சண்டை சீருடையால் ஏற்பட்டுள்ள சர்ச்சையும் மோதலும் !!

January 21, 2022

சமீபத்தில் தரைப்படை தினமன்று இந்திய தரைப்படைக்கான புதிய டிஜிடல் சீருடை அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் விரைவில் இவற்றை அனைத்து படை வீரர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தேசிய ஃபேஷன் டெக்னாலஜி கல்லூரியால் வடிவமைக்கப்பட்ட இந்த சீருடையை உயர் தரத்துடனும் தகுந்த விலையிலும் தயாரித்து தரும் நிறுவனங்களை அடையாளம் காண டென்டர் விடப்பட்டுள்ளது. அதாவது யார் வேண்டுமானாலும் இதில் பங்கேற்க முடியும் ஆகவே அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கு இடையே கடும் […]

Read More

புதிய துணை ராணுவ தளபதி நியமனம், அடுத்த CDS நியமனத்தில் ஒரு படி முன்னேற்றம் !!

January 21, 2022

இந்திய தரைப்படையின் துணை தளபதியாக லெஃப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார் இதன் மூலம் அடுத்த CDS நியமனத்தில் மற்றொரு படி முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போதைய தரைப்படை தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் நரவாணே தான் அடுத்த கூட்டுபடை தலைமை தளபதியாகும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது ஆகவே முதலில் அடுத்த தரைப்படை தலைமை தளபதிக்கான அதிகாரியை இப்போதே இறுதி செய்ய வேண்டியதாகிறது. ஆகவே ஜெனரல் நரவாணே கூட்டுபடை தலைமை தளபதியாக நியமிக்கபடும் பட்சத்தில் லெஃப்டினன்ட் ஜெனரல் மனோஜ் […]

Read More

17 வயது இந்திய இளைஞர் சீன ராணுவத்தால் கடத்தப்பட்ட விவகாரம் !!

January 21, 2022

அருணாச்சல பிரதேச மாநிலத்தின் மேல் சியாங் மாவட்டத்தின் பிஷிங் கிராமத்தின் அருகே உள்ள லுங்டா ஜோர் பகுதியை சேர்ந்த 17 வயது இளைஞர் ஒருவர் சீன ராணுவத்தால் 18ஆம் தேதியன்று கடத்தப்பட்டு உள்ளார். கடத்தப்பட்ட இளைஞரும் அவரது நண்பரும் இந்திய எல்லைக்குள் காட்டு பகுதியில் வேட்டையாட சென்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது சீன ராணுவத்திடம் இருந்து அவரது நண்பர் மற்றும் தப்பி வந்த நிலையில் அருணாச்சல் கிழக்கு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் தபிர் காவோ இதனை […]

Read More

சீனாவின் ஜே-20 ஸ்டெல்த் போர் விமானம் போருக்கு தயார் சீனா அறிவிப்பு !!

January 21, 2022

சீனா சொந்தமாக தயாரித்த ஜே-20 ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமானது தற்போது போர் நடவடிக்கைகளில் ஈடுபட தயார் அந்நாட்டு அரசு ஆதரவு ஊடகமான க்ளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது ஜே-20 போர் விமானங்கள் சீன ராணுவத்தின் வடக்கு கட்டளையகத்தில் சேவையில் உள்ளன, மேலும் சீன விமானப்படையின் இரண்டு படையணிகள் இந்த விமானங்களை இயக்கி வருகின்றன. பார்வைக்கு அப்பால் உள்ள இலக்குகளை குறிவைத்து தாக்கவும், இரவிலும் இயங்கவும் அனைத்து கால நிலைகளிலும் இயங்கவும் இந்த விமானத்தால் […]

Read More

நக்சல்கள் மற்றும் பயங்கரவாதிகளை வேட்டையாடிய CRPF கமாண்டோக்களை கொண்டு உருவாக்கப்படும் புதிய படை !!

January 21, 2022

தில்லி காவல்துறை மத்திய இந்தியாவில் நக்சல்கள் மற்றும் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை வேட்டையாடிய அனுபவம் கொண்ட CRPF கமாண்டோ வீரர்களை கொண்டு ஒரு அதிவிரைவு படையை உருவாக்கி உள்ளது. இந்த பணையணியில் 50 கமாண்டோ வீரர்கள் இருப்பர், இவர்கள் CRPFல் தான் பணியாற்றுவாரகள் ஆனால் தலைநகர் தில்லியில் தில்லி காவல்துறை சார்பில் முகாமிட்டு பணியாற்றுவர். தில்லியில் எங்கு தாக்குதல் நடந்தாலும் வெறுமனே 15 நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு சென்று பதிலடி கொடுப்பார்கள், மேலும் இரவு பகல் என […]

Read More

மேம்படுத்தப்பட்ட பிரம்மாஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை !!

January 21, 2022

பிரம்மாஸ் சூப்பர்சானிக் ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட வடிவம் நேற்று ஒடிசா மாநிலத்தில் உள்ள சோதனை மையத்தில் இருந்து ஏவப்பட்டு இலக்கை வெற்றிகரமாக சென்றடைந்து தாக்கி அழித்தது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் பிரம்மாஸ் ஏரோஸ்பேஸ் ஆகியவை இணைந்து நடத்திய இந்த சோதனையில் ரஷ்யாவின் NPOM விஞ்ஞானிகளும் கலந்து கொண்டனர். இரண்டு அமைப்புகளுமே தொடர்ந்து பிரம்மாஸ் ஏவுகணையை மேம்படுத்தி மேம்படுத்தி அதன் திறன்களை அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சோதனை வெற்றி […]

Read More