Day: January 19, 2022

உக்ரைனுக்கு டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை டெலிவரி செய்த இங்கிலாந்து மூளும் போர் பதட்டம் !!

January 19, 2022

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே மிகவும் பதட்டமான சூழல் நிலவும் பட்சத்தில் இங்கிலாந்து உக்ரைனுக்கு டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை அனுப்பி வைத்துள்ளது. இந்த தகவலை பிரிட்டன் பாதுகாப்பு துறை அமைச்சர் பென் வால்லெஸ் பாராளுமன்றத்தில் உக்ரைன் தற்காத்து கொள்ள உதவும் வகையில் குறுந்தூர ஏவுகணைகளை டெலிவரி செய்ததாக அறிவித்தார். ரஷ்யாவின் டாங்கிகள் உக்ரைனுக்குள் படையெடுத்து ஊடுருவினால் இது உக்ரைனுக்கான இங்கிலாந்தின் முதல்கட்ட உதவியாக அமையும் எனவும் அவர் அறிவித்தார். ரஷ்யாவுமீ சமீபத்தில் உக்ரைன் உடனான எல்லையை நோக்கி […]

Read More

ரஷ்ய படையெடுப்பை தடுக்க உக்ரைனுக்கு சிறப்பு படைகளை அனுப்பி வைத்துள்ள கனடா !!

January 19, 2022

கனடா நேட்டோ சார்பாக ஒரு சிறப்பு படை அணியை உக்ரைனுக்கு ரஷ்ய படையெடுப்பை தடுக்கும் பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கனடிய சிறப்பு படைகள் படையணி உக்ரைன் படைகளுக்கு உதவியாகவும் முழு அளவிலான படையெடுப்பு வெடித்தால் கனடிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றவும் பணிக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் கனடிய சிறப்பு படைகள் நேட்டோ சார்பாக போஸ்னியா, யூகோஸ்லாவியா, கொசோவா, லிபியா, ஈராக், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சண்டையிட்டுள்ளன. கனடாவின் அதி சிறப்புமிக்க JOINT TASK […]

Read More

தொடர்ந்து இரண்டாவது முறையாக சிறப்பு விருந்தினர்களின்றி நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பு விழா !!

January 19, 2022

இந்தியா 1950ஆம் ஆண்டு குடியரசானதை ஒட்டி ஒவ்வொரு ஆண்டும் தலைநகர் தில்லியில் ராணுவ படையணிகளின் சிறப்புமிக்க அணிவகுப்பு நடைபெறும் இதில் பல்வேறு நாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வது வழக்கம். இந்த வருடம் ஐந்து மத்திய ஆசிய நாடுகளின் தலைவர்களுக்கு இந்திய அரசு சார்பில் குடியரசு தின விழாக்களில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் கொரோனாவின் உருமாற்றம் அடைந்த கிருமியான ஒமைக்ரானின் தாக்கம் காரணமாக அவர்கள் […]

Read More

இந்திய ராணுவ தளபதியை கைது செய்ய இங்கிலாந்து காவல்துறையிடம் புகார் அளிப்பு !!

January 19, 2022

இங்கிலாந்து தலைநகர் லண்டனை மையமாக கொண்டு செயல்படும் ஸ்டோக் வைட் எனப்படும் சட்ட நிறுவனம் இந்திய ராணுவ தளபதியை கைது செய்ய அந்நாட்டு காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது. லண்டன் மாநகர காவல்துறையின் போர் குற்றங்கள் பிரிவிடம் காஷ்மீரில் செயல்பாட்டாளர்கள், ஊடகத்தினர் போன்றோர் கைது செய்யப்பட்டும் கடத்தப்பட்டும் சித்திரவதை செய்யப்படுவதாகவும் இதற்கான ஆதாரங்களை சமர்பித்து உள்ளதாகவும் இந்திய ராணுவ தளபதி ஜெனரல் நரவாணே மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தலைமையில் இது நடப்பதாகவும் அந்த நிறுவனம் […]

Read More

1000 ட்ரோன்கள் சாகச நிகழ்ச்சியை நடத்தும் உலகிலேயே நான்கு நாடுகளின் வரிசையில் இந்தியா !!

January 19, 2022

அனைத்து வருடமும் குடியரசு தின விழா அணிவகுப்பு நிறைவடைந்த பின்னர் பங்கேற்ற படையணிகள் தங்களது படை அமைப்புகளுக்கு திரும்பி செல்லும். இதனை குறிக்க 29ஆம் தேதி அன்று தலைநகர் தில்லியில் படைகளின் இசை வாத்திய நிகழ்ச்சி படைகள் பாசறை திரும்பும் நிகழ்வாக நடத்தப்படும். அந்த வகையில் இந்த வருடம் நடைபெறும் படைகள் பாசறை திரும்பும் நிகழ்வில் சுமார் 1000 ட்ரோன்களின் சாகசம் நடைபெற உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த ஆளில்லா விமானங்களின் சாகச நிகழ்ச்சியை […]

Read More

தில்லியில் கைபற்றப்பட்ட குண்டு ட்ரோன்மூலம் காஷ்மீர் பஞ்சாப் வழியாக தில்லி வந்திருக்கலாம் திடுக்கிடும் தகவல் !!

January 19, 2022

தலைநகர் தில்லியில் உள்ள காஸிபூர் பூ சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஒரு சக்திவாய்ந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வெடி குண்டை தேசிய பாதுகாப்பு படையின் கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு சென்று வெடிக்க வைத்து செயலிழக்க செய்தனர். இந்த சம்பவம் பற்றி பாதுகாப்பு அமைப்புகள் தீவிரமாக விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்த குண்டு பல பாகங்களாக பாகிஸ்தானில் இருந்து ஆளில்லா விமானம் மூலமாக […]

Read More

இந்திய கடற்படை கப்பலில் வெடிப்பு மூன்று கடற்படை வீரர்கள் வீரமரணம் !!

January 19, 2022

மும்பையில் உள்ள இந்திய கடற்படையின் மேற்கு பிரிவு கடற்படை தளத்தில் முன்னனி போர்கப்பலான ஐ.என்.எஸ். ரன்வீர் நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது நேற்று தீடிரென ஐ.என்.எஸ். ரன்வீர் நாசகாரி கப்பலுக்கு உள்ள ஒரு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததில் மூன்று கடற்படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். கப்பலில் பணியில் இருந்த மற்ற வீரர்கள் அனைவரும் உடனடியாக விரைந்து செயல்பட்டு தீயை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தற்போது இந்திய கடற்படை தலைமையகம் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி […]

Read More

சீனாவுக்கு எதிராக ஐந்து எஸ்-400 அமைப்புகளும் நிலை நிறுத்தப்படும் !!

January 19, 2022

இந்தியா சுமார் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஐந்து எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்க ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் தற்போது இரண்டு அமைப்புகள் இந்தியா வந்து சேர்ந்துள்ளன அவற்றில் முதலாவது அமைப்பு இந்திய விமானப்படையால் பஞ்சாபில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது. இரண்டாவது அமைப்பு நிலைநிறுத்தப்படும் இடம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள நிலையில் முதலாவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பானது ஏப்ரல் மாதம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என தெரிகிறது. இந்த ஐந்து எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகளும் […]

Read More