Day: January 17, 2022

பிரம்மாஸ் வாங்க ஆர்வம் காட்டும் சவுதி அரேபியா மற்றும் UAE இறுதிகட்ட பேச்சுவார்த்தைகள் !!

January 17, 2022

சமீபத்தில் ஃபிலிப்பைன்ஸ் இந்தியாவிடம் இருந்து மூன்று பிரம்மாஸ் ஏவுகணை அமைப்புகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்ததை அனைவரும் அறிவோம். இந்த மூன்று அமைப்புகள் அவற்றை இயக்கும் வீரர்கள் மற்றும் பராமரிக்கும் வீரர்களுக்கான பயிற்சி செலவுகள அனைத்தையும் இந்த ஒப்பந்தம் உள்ளடக்கியதாகும். இந்த நிலையில் அரேபிய நாடுகளான சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவையும் இந்தியாவிடம் இருந்து ஏவுகணைகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றன. இந்தியாவின் ஆகாஷ் மற்றும் பிரம்மாஸ் ஏவுகணைகள் மீது UAE ஆர்வம் […]

Read More

இந்தியாவின் அடுத்த தலைமுறை ஆகாஷ் ஏவுகணைகள் மீது ஆர்வம் காட்டும் வியட்நாம் !!

January 17, 2022

இந்தியா சொந்தமாக தயாரித்த ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு மீது சில ஆண்டுகளுக்கு முன்னர் வியட்னாம் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியது. அந்த நாடு பயன்படுத்தி வந்த சோவியத் காலகட்ட பெச்சோரா வான் பாதுகாப்பு அமைப்புக்கு மாற்றாக ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பை வியட்நாம் பார்த்தது. இந்த நிலையில் இந்தியா வந்த வியட்நாம் குழுவுக்கு நேரடியாக ஆகாஷ் அமைப்பின் திறன்கள் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில் குறைந்த இயக்க வரம்பு காரணமாக ஒப்பந்தம் இறுதியாகவில்லை. இந்த நிலையில் தற்போது மீண்டும் […]

Read More

ரஃபேலை விட வலிமையான போர் விமானத்தின் என்ஜின் சோதனை !!

January 17, 2022

ஃபிரான்ஸ் எதிர்கால போர் களத்திற்கு உகந்த FCAS – FUTURE COMBAT AIR SYSTEM அதாவது எதிர்கால வான் சண்டை அமைப்பு விமானத்தை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு உள்ளது. இந்த புதிய தலைமுறை போர் விமான திட்டத்திற்கு தீடிரென ஒரு மிகப்பெரிய உந்துதல் கிட்டியுள்ளது அதாவது இதற்கான என்ஜின் சோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 ஜனவரி அன்று நிலத்தில் நடைபெற்ற சோதனையில் மேற்குறிப்பிட்ட என்ஜின் வெற்றிகரமாக தனது திறன்களை நிருபித்துள்ளது. இந்த போர் விமான திட்டத்தில் ஃபிரான்ஸ் […]

Read More

குடியரசு தின விழாக்களில் நேதாஜியின் பிறந்தநாளும் அடக்கம் ஜனவரி 23 முதல் 26 வரை கொண்டாட்டங்கள் !!

January 17, 2022

இந்த வருடம் முதல் இந்திய குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் ஜனவரி 23 முதல் 26 வரை மூன்று நாட்கள் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம் இந்திய சுதந்திர போராட்டத்தில் மிக முக்கியமான பங்கு வகித்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுடைய பிறந்த நாளையும் உள்ளடக்கியதாகும். நேதாஜியின் பிறந்தநாளை இதற்கு முன் பராக்ரம் திவாஸ் என மத்திய அரசு அறிவித்து கொண்டாடி வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Read More

காஷ்மீர் என்கவுன்டர்; 1 காவலர் வீரமரணம், 1 பயங்கரவாதி வீழ்த்தப்பட்டான் !!

January 17, 2022

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டதின் பரிவான் பகுதியில் பயங்கரவாதிகள் பற்றிய துப்பு கிடைத்த நிலையில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். அப்போது பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதை அடுத்து என்கவுன்டராக மாறி துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்த சண்டையில் காவலர் ரோஹித் சிப் வீரமரணம் அடைந்தார், 3 ராணுவத்தினர் காயமடைந்தனர், 1 ஜெய்ஷ் பயங்கரவாதியும் கொல்லப்பட்டான்.

Read More