Day: January 15, 2022

வெளிநாடுகளில் உள்ள இந்திய ராணுவ தளங்களின் பட்டியல் !!

January 15, 2022

இந்தியா பல்வேறு வெளிநாடுகளில் அமைத்துள்ள ராணுவ தளங்களின் விவரங்களை உள்ளடக்கிய விரிவான பட்டியலை கீழே காணலாம். 1) தஜிகிஸ்தான்: ஃபார்கோர் விமான தளம், தலைநகர் துஷான்பேயில் இருந்து 130 கிலோமீட்டர் தென்கிழக்கே அமைந்துள்ள சிறுநகரம் தான் ஃபார்கோர். ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஈரான் உடனான இந்திய உறவுக்கு மிக முக்கியம். 2) பூட்டான்: இந்திய ராணுவ பயிற்சி குழு (IMTRAT – Indian Military Training Team) ராயல் பூட்டான் தரைப்படை மற்றும் பூட்டான் அரச குடும்ப பாதுகாப்பு […]

Read More

காஷ்மீரில் ஊடுருவி இளைஞர்களை சேர்க்க முயலும் பயங்கரவாத அமைப்புகள் !!

January 15, 2022

சமீபத்தில் இந்திய தரைப்படையின் உளவுத்துறை பயங்கரவாதிகள் இடையேயான உரையாடலை இடைமறித்து கேட்டது. அப்போது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் காஷ்மீரில் உள்ள வெளிநாட்டு பயங்கரவாதிகளிடம் எவ்வளவு இளைஞர்களை ஈர்க்க முடியுமோ அவ்வளவு பேரை ஈர்க்கவும், குறிப்பாக 14 முதலாக 18 வயது வரை உள்ளோரை அதிகமாக குறிவைத்து மூளைச்சலவை செய்து பயங்கரவாதிகளாக மாற்றவும் உத்தரவு பிறப்பித்துள்ளது தெரிய வந்தது. ஒரு வெளிநாட்டு பயங்கரவாதி காஷ்மீருக்குள் ஊடுருவினால் குறைந்தபட்சம் நான்கு காஷ்மீர் இளைஞர்களை மூளைச்சலவை செய்து விடுவான் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிக்க 3 முக்கிய தளவாடங்களை வெளிநாடுகளில் இருந்து வாங்க தடை விதிப்பு !!

January 15, 2022

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் மூன்று முக்கிய ராணுவ தளவாடங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது. அதிவிரைவு வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை வெளிநாடுகளில் இருந்து வாங்க இருந்த நிலையில் தற்போது உள்நாட்டிலேயே கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதை போல் ATV – ALL TERRAIN VEHICLE எனப்படும் அனைத்து நிலப்பரப்பு பகுதியிலும் பயணிக்கும் வாகனங்களையும் உள்நாட்டிலேயே கொள்முதல் செய்ய உள்ளனர். மேலும் இலகுரக இயந்திர […]

Read More

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத குழுக்கள் மீது மியான்மர் ராணுவம் தாக்குதல் !!

January 15, 2022

மியான்மர் நாட்டில் பதுங்கி இருக்கும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகளின் மீது மியான்மர் ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது. நேற்று அதிகாலை இந்திய எல்லையில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்நாட்டின் சீனாம் கிராமத்தில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் இந்திய பாரா சிறப்பு படையினர் பங்கேற்றதாக தகவல் வெளியான நிலையில் தற்போது மியான்மர் ராணுவமும் இந்த தாக்குதலில் கூட்டாக ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் -ரஷ்யா !!

January 15, 2022

சமீபத்தில் அமெரிக்கா உக்ரைன் எல்லையோரம் ரஷ்யாவின் ராணுவம் நடத்தி வரும் போர் பயிற்சிகளுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில் அவற்றை நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தது. இந்த நிலையில் இதற்கு ரஷ்யா பதிலடி கொடுக்கும் விதமாங அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது இதனை ரஷ்ய அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ளார். அதில் ரஷ்யாவின் ராணுவ படையணிகள் ரஷ்யாவின் பிராந்தியத்திற்குள் பயிற்சி நடத்துகின்றன அது தொடர்ந்து நடைபெறும் அதற்கான முழு உரிமை உண்டு என பதில் கொடுத்துள்ளது.

Read More

இந்தியாவின் பத்மஶ்ரீ விருது பெற்ற பிரிட்டன் MPக்கு சீன உளவு நிறுவனத்துடன் தொடர்பு !!

January 15, 2022

இங்கிலாந்தின் லேபர் கட்சியை சேர்ந்த பேர்ரி கார்டினர் இந்திய வம்சாவளி மக்கள் அதிகம் வசிக்கும் வடக்கு ப்ரென்ட் பகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் இந்திய வம்சாவளி மக்களுடன் காட்டிய நெருக்கம் மற்றும் அவர்களின் நலன் சார்ந்து ஆற்றிய பணிகளை பாராட்டி கடந்த 2020ஆம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு பத்மஶ்ரீ விருதை அறிவித்தது. தற்போது இங்கிலாந்தின் உள்நாட்டு உளவுத்துறையான MI5 இவருக்கு சீன உளவாளி ஒருவருடன் தொடர்பு இருப்பதாகவும் அவரிடம் இருந்து […]

Read More