கடந்த செப்டம்பர் மாதம் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையின் கட்டளை அதிகாரி அவரது மனைவி மகன் மற்றும் 4 வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்தி கொன்றனர். இதை தொடர்ந்து இதற்கு பொறுப்பான மணிப்பூரின் மக்கள் விடுதலை ராணுவத்தை பழிவாங்க இந்திய தரைப்படை தீவிர முயற்சி எடுத்து வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை பாரா சிறப்பு படை வீரர்கள் மியான்மருக்குள் 10 கிலோமீட்டர் புகுந்து சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தாக்குதல் நடத்தினர். இதில் நோங்தோம்பா மற்றும் லேய்ச்சில் ஆகிய இரண்டு […]
Read Moreரஷ்ய கடற்படையின் ஏவுகணை கப்பலான வர்யாக், நாசகாரி கப்பலான அட்மிரல் ட்ரிபூஸ் மற்றும் டேங்கர் கப்பலான போரிஸ் பூடோமா ஆகியவை இரண்டு நாள் சுற்றுபயணமாக கொச்சி துறைமுகம் வந்துள்ளன. மூன்று ரஷ்ய போர் கப்பல்களையும் மூத்த இந்திய கடற்படை அதிகாரிகள் கடற்படை இசை குழுவின் இசை கச்சேரி சகிதம் வரவேற்றனர். ரஷ்ய படையணியின் தலைவர் கேப்டன் அனடோலி வெலிஷ்கோ, வர்யாக்கின் கட்டளை அதிகாரி கேப்டன் ரோமன் க்லுஷாகோவ், அட்மிரல் ட்ரிபூஸின் கட்டளை அதிகாரி கேப்டன் இகோர் டோல்பாடோவ் […]
Read Moreவருகிற 2024-2025ஆம் ஆண்டு வாக்கில் இந்திய கடற்படை தனது அடுத்த தலைமுறை சூப்பர் நாசகாரி கப்பல்களுக்கான டிசைனை இறுதி செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய கடற்படை Clean Sheet எனப்படும் டிசைனை அடிப்படையாக கொண்டு அடுத்த தலைமுறை நாசகாரி கப்பல்களுக்கான பணிகளை 2021ஆம் ஆண்டின் இடை பகுதியில் துவங்கியது. ப்ராஜெக்ட்-18 என அழைக்கப்படும் இந்த திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் நாசகாரி கப்பல்கள் ஒவ்வொன்றும் தலா 13,000 டன்கள் எடையுடன் இருக்கும் மொத்தமாக ஆறு கப்பல்கள் 50,000 […]
Read Moreஇந்தியாவின் அடுத்த தலைமுறை நாசகாரி கப்பல்களில் லேசர், ரெயில் கன், ஹைப்பர்சானிக் ஆயுதங்கள் மற்றும் வெவ்வேறு வகையான ஏவுகணைகளை ஏவும் அமைப்பு (UVLS) ஆகியவை இருக்கும். மேலும் வழக்கமான டீசல் என்ஜின் அமைப்புக்கு பதிலாக ஒருங்கிணைந்த மின்சார என்ஜின் உந்துதல் அமைப்பு, அடுத்த தலைமுறை ஸ்டெல்த் மற்றும் சென்சார் அமைப்புகளும் இந்த வகை அடுத்த தலைமுறை நாசகாரி கப்பல்களில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்குறிப்பிட்ட அதிநவீன ஆயுத அமைப்புகளின் உருவாக்க பணிகளில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் […]
Read Moreசமீபத்தில் ரஷ்யா TU-160M எனும் புதிய அதிநவீன தொலைதூர சூப்பர்சானிக் குண்டுவீச்சு விமானத்தை 30 நிமிடங்ஙளுக்கு கஸான் ஏவியேஷன் தொழிற்சாலை பகுதியில் வெற்றிகரமாக சோதனை செய்தது. கடந்த பல ஆண்டுகளில் முதல் முறையாக ரஷ்யா தயாரித்த இந்த TU-160M ரக குண்டுவீச்சு விமானங்கள் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள TU-160 தொலைதூர சூப்பர்சானிக் குண்டுவீச்சு விமானங்களின் மேம்படுத்தப்பட்ட வடிவமாகும். இந்த புதிய TU-160M தொலைதூர சூப்பர்சானிக் குண்டுவீச்சு விமானங்களில் அதிநவீன ஏவியானிக்ஸ் மற்றும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் உள்ளதாக […]
Read Moreசீனா தற்போது 200 க்கும் அதிகமான “ஷியான் H-6K” எனப்படும் தொலைதூர ஜெட் குண்டுவீச்சு விமானங்களை இயக்கி வருகிறது. மேலும் எதிர்காலத்தில் ஷியான் H-20 எனப்படும் சப்சானிக் குண்டுவீச்சு போர் விமானங்களையும் படையில் இணைக்க உள்ளது இப்படி நாளுக்கு நாள் சீன குண்டுவீச்சு விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இந்திய விமானப்படை ரஷ்யாவிடம் இருந்து Tupolev TU-160M ரக சூப்பர்சானிக் தொலைதூர குண்டுவீச்சு விமானங்களை வாங்குவது நல்லது என்ற கருத்து எழுந்துள்ளது. பிரம்மாஸ்- ஏ […]
Read Moreஃபிலிப்பைன்ஸ் அரசு அதிகாரப்பூர்வமாக பிரம்மாஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்திற்கு 374 மில்லியன் டாலர் மதிப்பிலான 3 பிரம்மாஸ் ஏவுகணை அமைப்புகளுக்கான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது. இவை ஃபிலிப்பைன்ஸ் கடற்படைக்காக வாங்கப்பட உள்ளன, கடற்கரையோர பகுதிகளில் இருந்து அத்துமீறும் எதிரி போர் கப்பல்களை தாக்கி அழிக்கும் பணிக்கு இவை பயன்பட உள்ளன. இந்த ஒப்பந்தம் வாயிலாக கடல்சார் மற்றும் தரை இலக்குகளை தாக்கி அழிக்கும் க்ருஸ் ஏவுகணைகளை கொண்டுள்ள வெகுசில நாடுகளில் ஒன்றாக ஃபிலிப்பைன்ஸும் இடம்பெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Read Moreதரைப்படை தினத்தை முன்னிட்டு தலைநகர் தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தரைப்படை தலைமை தளபதி ஜெனரல் நரவாணே சீன எல்லையோரம் ஆபத்தான நிலை உள்ளதாகவும் படைகளின் எண்ணிக்கை ஏறத்தாழ ஒரே அளவில் உள்ளதாகவும் கூறினார். மேலும் எதிர்கால திட்டங்களை பொறுத்தவரை சீன எல்லையோரம் இந்திய ராணுவம் படைகளை பின்வாங்குவது, குறைப்பது மற்றும் விலக்கி கொள்வது ஆகிய மூன்று நடவடிக்கைகளை முன்வைப்மதாக தெரிவித்தார். இந்த மூன்று நடவடிக்கைகளும் சீன தரைப்படையால் மேற்கொள்ளப்படும் வரை இந்திய படைகள் எல்லையோரம் தொடர்ந்து செயல்படும் […]
Read Moreஇந்திய கடற்படைக்கான ஒருங்கிணைந்த நீர்மூழ்கி எதிர்ப்பு போரியல் அமைப்பை உருவாக்க இங்கிலாந்தின் அல்ட்ரா எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் இந்தியாவின் மஹிந்திரா டிஃபென்ஸ் ஆகியவை கைகோர்த்துள்ளன. இதுபற்றி அல்ட்ரா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் சைமன் ப்ரைஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்திய கடற்படையின் நீர்மூழ்கி எதிர்ப்பு திறன்களை வலுப்படுத்துவதில் மிகழ்ச்சி அடைகிறோம் என கூறியுள்ளார். மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்திய கடற்படை தனியார் துறைக்கு வழங்கிய மிக முக்கியமான ஒப்பந்தம் எனவும் இதனை தங்களது நிறுவனம் எதிர்நோக்கி உள்ளதாகவும் கூறியுள்ளது. […]
Read Moreஇந்திய தரைப்படையின் தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் நரவாணே இந்தியா மீது போர் திணிக்கப்பட்டால் அதில் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என உறுதி அளித்துள்ளார். மேலும் அவர் சீனாவின் நடவடிக்கைகளுக்கு இந்தியாவின் பதிலடி மிகவும் கடுமையானதாக அழுத்தமாக இருந்ததாகவும் அதிக வீரர்கள் மற்றும் தளவாடங்களுடன் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். எல்லையோரம் படைகளின் நிலைநிறுத்தல் மறுசீரமைப்பு மற்றும் மறுசுழற்சி முறையில் நடைபெற்று வருவதாகவும் முன்னர் கவசபடைகளே இல்லாத சிக்கீமில் தற்போது ஒரு படையணி உள்ளதாகவும் கூறினார். வடகிழக்கு […]
Read More