Day: January 13, 2022

மணிப்பூரில் ஆயுதப் படைகள் சிறப்பு சட்டம் அமலில் இருக்கும் காலம் நீட்டிப்பு

January 13, 2022

மணிப்பூரில் ஆயுதப்படைப்படைகளுக்கான சிறப்பு சட்டத்தை நீக்க வேண்டும் என்ற குரல்கள் மேலோங்கி வரும் நேரத்தில் இந்த சட்டத்தை மேலும் ஒரு வருடத்திற்கு மனிப்பூர் அரசு நீட்டித்துள்ளது.இம்பால் முனிசிபர் ஏரியா தவிர மாநிலத்தின் அனைத்து பகுதிக்கும் இது பொருந்தும் என மனிப்பூர் அரசு தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில் மாநில பாதுகாப்பு படைகளுக்கும் மக்களுக்கும் உதவி செய்து அமைதியை நிலைநாட்ட இந்த சட்டம் தேவை என மணிப்பூருக்கான சிறப்பு செயலர் ஜியன் பிரகாஷ் […]

Read More

இந்திய ராணுவத்திற்காக ஆளில்லா வாகனங்களை தயாரிக்கும் சென்னை மாணவர்கள் பற்றிய கட்டுரை !!

January 13, 2022

சென்னை அம்பத்தூரில் உள்ள டோரஸ் ரோபோட்டிக்ஸ் நிறுவனம் SRM கல்லூரியில் பயின்ற கார்த்திகேயன், விபாகர் செந்தில் மற்றும் விக்னேஷ் கந்தசாமி ஆகியோரால் துவங்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வரும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் தற்போது இந்திய தரைப்படைக்கு Artificial Intelligence செயற்கை அறிவு திறன் கொண்ட ஆளில்லா வாகனம் ஒன்றை உருவாக்கி உள்ளது. மின்சாரத்தால் இயங்கும் இந்த வாகனங்களை சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் வீரர்கள் பாதுகாப்பாக இருந்து கொண்டே ரோபோட்டுகளை போல இயக்கி கண்ணிவெடிகள் மற்றும் […]

Read More

இஸ்ரோவின் புதிய தலைவர் யார் இவர் இவருடைய தகுதிகள் என்ன ??

January 13, 2022

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் புதிய தலைவராக மூத்த விஞ்ஞானி திரு. எஸ். சோம்நாத் அடுத்த தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு முதல் திருவனந்தபுரம் நகரில் அமைந்துள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குனராக பணியாற்றி வருகிறார். கேரளாவின் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த இவர் TKM பொறியியல் கல்லூரியில் பயின்று பின்னர் பெங்களூர் நகரில் அமைந்துள்ள IIScயில் ஏரோஸ்பேஸ் பொறியியலில் முதுகலை பட்டம் பெற்றவர் ஆவார். GSLV MK-3 மற்றும் PSLV ஆகிய ராக்கெட்டுகளின் […]

Read More

மொசாம்பிக் நாட்டிற்கு இடைமறிப்பு கலன்களை வழங்கிய இந்தியா !!

January 13, 2022

சமீபத்தில் மொசாம்பிக் நாட்டின் மபூட்டோ துறைமுக நகருக்கு இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். கேசரி போர்க்கப்பல் சுற்றுபயணமாக சென்றிருந்தது. அப்போது மொசாம்பிக் கடற்படைக்கு இரண்டு சோலாஸ் அதிவேக இடைமறிப்பு கலன்களை கேசரி போர் கப்பல் டெலிவிரி செய்தது. மேலும் மொசாம்பிக் நாட்டில் கடும் பஞ்சம் மற்றும் வறட்சி நிலவி வரும் நிலையில் 500 டன்கள் அளவிலான உணவு பொருட்களை ஐ.என்.எஸ். கேசரி போர்கப்பல் டெலிவரி செய்தது. இது தவிர மொசாம்பிக் நாட்டு கடற்படை வீரர்களுக்கு மேற்குறிப்பிட்ட படகுகளை இயக்கவும் […]

Read More

மேற்கு எல்லையோரம் அதிகரித்துள்ள பயங்கரவாதிகளின் எண்ணிக்கை !!

January 13, 2022

இந்தியாவின் மேற்கு எல்லையோர பகுதியில் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளதாக தரைப்படை தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் நரவாணே கூறியுள்ளார். மேலும் அவர் நமது அண்டை நாட்டின் வழிகாட்டுதல் மற்றும் உதவியினால் பல்வேறு முகாம்களில் பயங்கரவாதிகள் ஊடுருவ தயாராக இருப்பதாகவும் ஏற்கனவே ஒரு சில முயற்சிகள் நடைபெற்று உள்ளதாகவும் தெரிவித்தார். அதை போல சீன எல்லையை பொறுத்தவரை கடந்த ஜனவரியுடன் ஒப்பிடுகையில் தற்போது நிலைமை சாதகமாக உள்ளதாகவும் வடக்கு பகுதியை பாதுகாப்பதில் அதிக தீவிரம் காட்டி வருவதாகவும் […]

Read More

பூட்டான் எல்லையோரம் சீன கட்டுமானங்கள் டோக்லாம் பகுதிக்கு வைத்த குறியா ??

January 13, 2022

சீனா பூட்டான் இடையேயான எல்லையோர பகுதியில் 177 சதுர கிலோமீட்டர் பகுதி இரண்டு நாடுகளும் உரிமை கோரி வரும் சர்ச்சைக்குரிய பகுதி ஒன்று உள்ளது. இந்த சர்ச்சைக்குரிய பகுதியில் சீனா தற்போது கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது அதாவது சாலை வசதியுடன் கூடிய ஒரு கிராமத்தை நிர்மாணம் செய்து வருகிறது. 2020ஆம் ஆண்டு துவங்கிய பணிகள் 2021ஆம் ஆண்டு வேகம் அடைந்த நிலையில் ஏறத்தாழ 200 கட்டிடங்கள் சீனாவால் அமைக்கப்பட்டு இருப்பது அமெரிக்க செயற்கைகோள் புகைப்படங்கள் வாயிலாக […]

Read More