10ஆவது முறையாக கூட்டு ராணுவ ஒத்துழைப்பு கூட்டம் நடத்திய இந்தியா-ஒமன் !!

  • Tamil Defense
  • January 31, 2022
  • Comments Off on 10ஆவது முறையாக கூட்டு ராணுவ ஒத்துழைப்பு கூட்டம் நடத்திய இந்தியா-ஒமன் !!

சுமார் மூன்று வருட இடைவெளிக்கு பிறகு இந்தியா மற்றும் ஒமன் ஆகிய நாடுகள் கூட்டு ராணுவ ஒத்துழைப்பு கூட்டத்தை இந்திய தலைநகர் தில்லியில் நடத்தி உள்ளன.

இதற்காக ஒமன் பாதுகாப்பு அமைச்சகத்தின் பொது செயலர் முஹம்மது நாசர் அல் சாபி தலைமையிலான குழு கடந்த சனிக்கிழமை இந்தியா வந்துள்ளது.

ஒமன் சார்பில் முஹம்மது நாசர் அல் ஸாபி மற்றும் இந்தியா சார்பில் பாதுகாப்பு துறை செயலாளர் அஜய் குமார் ஆகியோர் இதில் தலைமை இடத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த கூட்டம் இந்தியா மற்றும் ஒமன் இடையே பாதுகாப்பு துறையில் அதிகபட்ச ஒத்துழைப்பு ஆகும், இதன் காரணமாக அடுத்த சில மாதங்களில் மேலும் பல முக்கிய சந்திப்புகள் நடைபெறலாம் என கூறப்படுகிறது.

மேலும் அல் சாபி இந்திய பாதுகாப்பு அமைச்சர் மற்றும் முப்படை தளபதிகளை சந்திக்க உள்ளார், ஒமன் இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.