1000 ட்ரோன்கள் சாகச நிகழ்ச்சியை நடத்தும் உலகிலேயே நான்கு நாடுகளின் வரிசையில் இந்தியா !!

அனைத்து வருடமும் குடியரசு தின விழா அணிவகுப்பு நிறைவடைந்த பின்னர் பங்கேற்ற படையணிகள் தங்களது படை அமைப்புகளுக்கு திரும்பி செல்லும்.

இதனை குறிக்க 29ஆம் தேதி அன்று தலைநகர் தில்லியில் படைகளின் இசை வாத்திய நிகழ்ச்சி படைகள் பாசறை திரும்பும் நிகழ்வாக நடத்தப்படும்.

அந்த வகையில் இந்த வருடம் நடைபெறும் படைகள் பாசறை திரும்பும் நிகழ்வில் சுமார் 1000 ட்ரோன்களின் சாகசம் நடைபெற உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த ஆளில்லா விமானங்களின் சாகச நிகழ்ச்சியை தில்லி ஐஐடியில் தோன்றிய BOTLAB எனும் தனியார் பாதுகாப்பு துறை நிறுவனம் நடத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகிலேயே இத்தனை ட்ரோன்களை கொண்டு கண்கவர் சாகச நிகழ்ச்சி நடத்தும் ஆற்றல் அமெரிக்கா ரஷ்யா மற்றும் சீனாவுக்கு தான் உள்ளது தற்போது அந்த வரிசையில் இந்தியாவும் இணைய உள்ளது என்பது கூடுதல் சிறப்பு ஆகும்.