பலூச்சிஸ்தான் போராளிகள் நடத்திய தாக்குதலில் 10 பாகிஸ்தான் ராணுவத்தினர் மரணம் !!

  • Tamil Defense
  • January 30, 2022
  • Comments Off on பலூச்சிஸ்தான் போராளிகள் நடத்திய தாக்குதலில் 10 பாகிஸ்தான் ராணுவத்தினர் மரணம் !!

பாகிஸ்தானில் உள்ள பலூச்சிஸ்தான் மாகாணத்தின் கெச் மாவட்டத்தில் பலூச்சிஸ்தான் விடுதலை இயக்கத்தினர் நடத்திய தாக்குதலில் 10 பாகிஸ்தான் வீரர்கள் மரணமடைந்தனர்.

இந்த தாக்குதல் சீனா மூதலீடு செய்துள்ள க்வதர் துறைமுகத்திற்கு வடக்கே நடைபெற்றுள்ளது பல ஆண்டுகளில் நடைபெற்ற மோசமான தாக்குதலாகவும் கருதப்படுகிறது.

பதிலுக்கு ராணுவம் நடத்திய தாக்குதலில் 1 போராளி கொல்லப்பட்டதாகவும் மூவர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் பாகிஸ்தான் ராணுவம் செய்தி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இறந்து போன வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் அனைத்து வகையான பயங்கரவாதமும் கடுமையாக ஒடுக்கப்படும் என கூறினார்.

பலூச்சிஸ்தான் விடுதலை இயக்கதினர் சீனா மற்றும் பாகிஸ்தானை தங்களது பகுதியை விட்டு வெளியேற்ற போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.