Day: January 9, 2022

மருத்துவ உதவி அனுப்பிய இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த ஆப்கன் !!

January 9, 2022

ஆஃப்கானிஸ்தானுக்கு மருத்துவ உதவிகளை அனுப்பி வைத்த இந்தியாவிற்கு தாலிபான் அரசு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியா இதுவரை மூன்று கட்டங்களாக ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனைக்கு மருத்துவ உதவிகளை அனுப்பி உள்ளது. வெள்ளிக்கிழமை அன்று மூன்றாவது தொகுதியாக சுமார் ஆறு டன்கள் அளவிலான மருந்துகள் உபகரணங்கள் மற்றும் ஐந்து லட்சம் கொரோனா தடுப்பூசிகளையும் அனுப்பி வைத்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து பேசிய தாலிபான் செய்தி தொடர்பாளர் சபியுல்லாஹ் மூஜாஹீத் ஆஃப்கானிஸ்தான் இஸ்லாமிய […]

Read More

இந்திய கடற்படைக்கு 200ஆவது கலனை வழங்கிய ஹிந்துஸ்தான் கப்பல் கட்டுமான தளம் !!

January 9, 2022

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் நகரில் அமைந்துள்ள ஹிந்துஸ்தான் கப்பல் கட்டுமான தளம் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. அதாவது இந்திய கடற்படைக்கு 200 ஆவது கலனை கட்டி வழங்கியுள்ளது 1000 கோடி ரூபாய் மதிப்பில் 50 டன்கள் எடை கொண்ட இந்த கலன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பல்பீர் என பெயரிடப்பட்டுள்ள இந்த பொல்லார்ட் ரக இழுவை படகு இந்திய கடற்படையில் மும்பையில் உள்ள இந்திய கடற்படை தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் படையில் இணைக்கப்பட்டது. தற்போது 20,000 […]

Read More

பிரதமரின் பாதுகாப்பு திட்டமிடும் பணிகள் எவ்வாறு நடைபெறும் விரிவான அலசல் !!

January 9, 2022

சமீபத்தில் பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் பிரதமர் பயணிக்கும் பாதை முடக்கப்பட்டதால் பின்னர் அவர் திரும்பி தலைநகர் தில்லிக்கு செல்லும் நிலை ஏற்பட்டது இதை தொடர்ந்து ஏற்பட்டுள்ள சர்ச்சையை நாம் அனைவரும் அறிவோம். பிரதமர் எனும் நபர் ஒரு இடத்திற்கு செல்கிறார் எனில் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வாறு நடைபெறும் என்பது குறித்து இந்த கட்டுரை விளக்குகிறது. பயணத்திற்கு மூன்று நாட்கள் முன்னரே குறிப்பிட்ட பகுதிக்கு SPG அதிகாரிகள் சென்று பார்வையிட்டு பின்னர் உள்நாட்டு உளவு அமைப்பான IB, […]

Read More

பாங்காங் ஏரிக்கு குறுக்கே பாலம் கட்டுவதை தனது உரிமையென நியாயபடுத்தும் அடாவடி சீனா !!

January 9, 2022

பாங்காங் ஸோ ஏரியின் குறுகிய பகுதியில் ஏரிக்கு குறுக்கே வடக்கு மற்றும் தெற்கு கரைகளை இணைக்கும் விதமாக சீன ராணுவம் ஒரு பாலத்தை கட்டி வருகிறது. இந்த நிலையில் பாங்காங் ஸோ சீனாவால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அக்சாய் சின் பகுதியில் உள்ளது இதையடுத்து இந்திய வெளியுறவு அமைச்சகம் சீனாவுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது. அதாவது சீனா கடந்த 60 ஆண்டு காலமாக சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்துள்ள பகுதியில் பாலம் கட்டி வருவதாகவும் இந்த ஆக்கிரமிப்பு மற்றும் […]

Read More

பஞ்சாபில் கைவிடப்பட்ட பாகிஸ்தான் படகை கண்டுபிடித்த BSF !!

January 9, 2022

பஞ்சாப் மாநிலத்தில் சட்லஜ் நதி பாய்ந்து வருவது அனைவருக்கும் தெரியும் இந்த நதி பாகிஸ்தானுடைய பஞ்சாப் வழியாக சென்று அரபி கடலில் கலக்கிறது. இந்திய பகுதிக்குட்பட்ட சட்லஜ் நதி கரையோரம் நமது எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்து பணி மேற்கொள்வது வழக்கம், சமீபத்தில் அந்த வகையில் ரோந்து பணி மேற்கொள்ளும் போது ஒரு கைவிடபட்ட பாகிஸ்தானிய படகை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கண்டறிந்தனர். இதையொட்டி படகை சோதனையிட்ட போது சந்தேகத்திற்கு உரிய எந்த பொருளும் […]

Read More

சம்பூர்னானந்த் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் மத போதகர் பட்ட படிப்பு செல்லாது என நிராகரித்த ராணுவம் கொதிக்கும் மாணவர்கள் !!

January 9, 2022

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ள சம்பூரனானந்த் சமஸ்கிருத பல்கலைகழகம் இந்து மத பண்டிதர்களுக்கானபட்ட படிப்புகளை வழங்கி வருகிறது. சமீபத்தில் இந்திய ராணுவம் பண்டிட், பண்டிட் கோர்க்கா, கிராந்தி, மெளலவி, போதகர், புத்த பிக்குகளுக்கான ஆட்தேர்வுக்கு விண்ணபங்களை வெளியிட்டது. அப்போது சம்பூர்னானந்த் சமஸ்கிருத பல்கலை கழக மாணவர்கள் விண்ணப்பித்து எழுத்து தேர்வு, மருத்துவ தேர்வு ஆகியவற்றை நிறைவு செய்து காத்திருந்த நிலையில் இந்திய ராணுவம் இப்பல்கலைகழகத்தின் படிப்பை பட்டபடிப்பாக கருத முடியாது என கூறி நிராகரித்தது. இதையடுத்து […]

Read More

அமெரிக்க ஆயுதங்களை பெற உள்ள ஜம்மு காஷ்மீர் காவல்துறை !!

January 9, 2022

ஜம்மு காஷ்மீர் காவல்துறை பல்வேறு வகையான படை நவீனமயமாக்கல் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அந்த வகையில் தற்போது அதிநவீன ஆயீதங்களை வாங்க டென்டர் விட்டுள்ளது. இதன்படி 500 சிக்-716 தாக்குதல் துப்பாக்கிகள் மற்றும் 100 சிக் எம்.பி.எக்ஸ் 9 மில்லிமீட்டர் கைத்துப்பாக்கிகளையும் அமெரிக்காவில் இருந்து வாங்க உள்ளது. ஏற்கனவே 8000 குண்டு துளைக்காத உடைகள், கவச வாகனங்கள், ட்ரோன்கள் போன்றவற்றை வாங்கிய அடுத்த சில நாட்களிலேயே இந்த டென்டர் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Read More