Breaking News

Day: January 8, 2022

காஷ்மீரை ராணுவ மயமாக்குவதாக முன்னாள் முதல்வர் மெஹ்பூபா மூஃப்தி மத்திய அரசு மீது குற்றச்சாட்டு !!

January 8, 2022

முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹ்பூபா மூஃப்தி மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ராணுவ மயமாக்குவதாக குற்றம்சாட்டி கடுமையாக விமர்சித்து உள்ளார். காஷ்மீரின் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளான சோனமார்க் மற்றும் குல்மார்க் ஆகிய பகுதிகளில் மிகப்பெரிய அளவிலான நிலங்களை இந்திய தரைப்படைக்கு அந்த மாநில நிர்வாகம் வழங்கி உள்ளது. அதாவது இந்திய தரைப்படையிடம் ஒப்படைக்கப்பட்ட நிலத்தின் அளவு சுமார் 70 ஏக்கர் ஆகும் பாதுகாப்பு என்ற போர்வையில் தங்கள் நிலங்கள் பறிக்கப்படுவதாகவும் அவர் விமர்சித்து […]

Read More

தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களுக்கு துணை ராணுவ படைகளை அனுப்ப உள்துறை அமைச்சகம் அனுமதி !!

January 8, 2022

மத்திய உள்துறை அமைச்சகம் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களுக்கு துணை ராணுவ படையணிகளை அனுப்புவதற்கு அனுமதி அளித்துள்ளது, முதல் கட்டமாக உத்திர பிரதேசத்திற்கு 225 கம்பனி வீரர்கள் செல்ல உள்ளனர். மத்திய ரிசர்வ் காவல்படை மற்றும் எல்லை பாதுகாப்பு படை ஆகியவை கூட்டாக 60 முதல் 70 கம்பனிகளையும் மற்ற துணை ராணுவ படைகள் கூட்டாக 75 முதல் 80 கம்பனி வீரர்களை உத்தர பிரதேசத்திற்கு அனுப்பி வைக்க உள்ளன. ஆக ஒரு கம்பனிக்கு 120 வீரர்கள் […]

Read More

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஜெட் பயிற்சி விமானம் வெற்றிகரமாக சோதனை புதிய மைல்கல் !!

January 8, 2022

ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனமானது முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரித்த ஜெட் பயிற்சி விமானம் வெற்றிகரமாக சோதனையை நிறைவு செய்து உள்ளது. IJT – Intermediate Jet Trainer அதாவது இடைநிலை ஜெட் பயிற்சி விமானம் என அழைக்கப்படும் இந்த விமானம் ஏற்கனவே விமானப்படையில் பயன்பாட்டில் உள்ள பழைய கிரண் பயிற்சி விமானங்களுக்கு மாற்றாகும். உயரம், வேகம், எடை சுமக்கும் திறன், என்ஜினுடைய திறன்கள், சக்தி, குறைந்த ஆயுதங்கள் போன்ற விமானப்படையின் தேவைகள் ஏற்கனவே வெற்றிகரமாக […]

Read More

தெலுங்கானா மற்றும் ஆந்திர பகுதிகளுக்கான புதிய கமாண்டர் பதவி ஏற்பு !!

January 8, 2022

மேஜர் ஜெனரல் மன்ஜீத் சிங் மன்ரால் தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களை உள்ளடக்கிய TASA – Telangan Andhra Sub Area பகுதியின் கமாண்டராக பதவி ஏற்றார். இவர் தேசிய பாதுகாப்பு அகாடமி இந்திய ராணுவ அகாடமி ஆகியவற்றில் பயிற்சி முடித்து இந்திய தரைப்படையின் பொறியியல் படைப்பரிவில் இணைந்து பணியாற்றி வந்தவர் ஆவார். இவர் பூனே நகரத்தில் அமைந்துள்ள தரைப்படையின் ராணுவ பொறியியல் கல்லூரி மற்றும் தான் பயின்ற இந்திய ராணுவ அகாடமியிலேயே பயிற்சியாளராகவும் பணியாற்றிய […]

Read More

சீன ஜே-16 விமானங்களுக்கு சவால் விடும் தைவானின் புதிய எஃப்-16 விமானங்கள் !!

January 8, 2022

டிசம்பர் 5 ஆம் தேதி தைவான் நாட்டின் விமானப்படை ஒரு போர் ஒத்திகை பயிற்சியை நடத்தியது இதில் புதிதாக படையில் இணைந்த எஃப்-16 வைப்பர் ரக போர் விமானங்கள் பங்கேற்றன. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த பயிற்சியில் தைவான் நாட்டு விமானப்படையின் போர் தயார்நிலை பல்வேறு வகையான நடவடிக்கைகள் மூலமாக சோதித்து அறியப்பட்டது. அப்போது சீன விமானப்படையின் ஜே-16 ரக போர் விமானங்கள் தைவான் எல்லையில் ஊடுருவுவது போன்றும் உடனடியாக அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தைவான் […]

Read More