Day: January 5, 2022

1971போரில் பங்கேற்ற கடற்படை அதிகாரி வைஸ் அட்மிரல் எஸ். ஹெச். சர்மா இயற்கை எய்தினார் !!

January 5, 2022

1971 இந்திய பாகிஸ்தான் இடையே நடைபெற்ற வங்கதேச விடுதலை போரில் பங்கேற்ற வைஸ் அட்மிரல் ஶ்ரீ ஹரிலால் சர்மா ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 99 ஆகும், 1971 வங்கதேச விடுதலை போரில் இந்திய கடற்படையின் கிழக்கு கட்டளையகத்தின் கொடி அதிகாரியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. வயது முதிர்ச்சி காரணமாக திங்கட்கிழமை அன்று மாலை 6.20 மணியளவில் அவர் இயற்கை எய்தினார் இவர் கிழக்கு கடற்படை அணியின் கொடி அதிகாரியாகவும் பணியாற்றியவர் என்பது […]

Read More

இந்திய தேஜாஸிற்கு ரேடோம்களை சப்ளை செய்ய உள்ள பிரிட்டிஷ் நிறுவனம் !!

January 5, 2022

இந்தியா சொந்தமாக உள்நாட்டிலேயே தயாரித்த இலகுரக தேஜாஸ் போர் விமானத்திற்கான ரேடோம்களை மெக்கிட் ஏரோஸ்பேஸ் எனும் பிரிட்டிஷ் நிறுவனம் வழங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தத்தை நமது விமான மேம்பாட்டு முகமை மெக்கிட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்திற்கு வழங்கி உள்ளது, இந்த ரேடோம்கள் என்பது ஒரு விமானத்தின் மூக்கு பகுதியாகும் இதற்குள் தான் ரேடார் பொருத்தப்படும். ஒப்பந்தத்தின் படி மெக்கிட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் காம்போஸிட் மெட்டீரியலால் செய்யப்பட்ட இரண்டு ரேடோம்களை தயாரித்து வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரேடோம்களை […]

Read More

இந்தியாவின் புதிய ஸ்டெல்த் முழுமையான ஆளில்லா போர் விமானம் FUFA !!

January 5, 2022

இந்தியாவின் வானூர்தி மேம்பாட்டு முகமை FUFA – Futuristic Unmanned Fighter Aircraft அதாவது ஒரு முழுமையான எதிர்கால ஆளில்லா போர் விமான திட்டத்தை துவங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான டென்டர் ஒன்றை வெளியிட்டுள்ள அந்த முகமை காற்று சுரங்கத்தில் சோதனை செய்ய ஒரு மாதிரி வடிவத்தை சமர்ப்பிக்குமாறு பல்வேறு நிறுவனங்கள் கல்லூரிகள் பல்கலைகழங்களிடம் கோரியுள்ளது. இதே போன்று பல்வேறு நாடுகள் ஒரு முழுமையான ஸ்டெல்த் திறன் கொண்ட ஆளில்லா போர் விமானத்தை தயாரிக்கும் ஆய்வு […]

Read More

60 சுதேசி கடல்சார் பல திறன் ஹெலிகாப்டர்களை வாங்க உறுதியளித்த கடற்படை !!

January 5, 2022

ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனமானது முழுக்க முழுக்க இந்தியாவிலேயே ஒரு பலதிறன் நடுத்தர ரக ஹெலிகாப்டரை வடிவமைத்து தயாரிக்க விரும்புகிறது. தரைப்படை கடற்படை மற்றும் விமானப்படைகள் என முப்படைகளுக்கும் தனி தனியாக மூன்று வெவ்வேறு விதமான ஹெலிகாப்டர்களை தயாரித்து வழங்க ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் முயன்று வருகிறது. இந்த நிலையில் இந்திய கடற்படைக்கு சிறப்பு நடவடிக்கைகள், நீர்மூழ்கி எதிர்ப்பு மற்றும் கப்பல் எதிர்ப்பு என மூன்று வெவ்வேறு வகையான ஹெலிகாப்டர்களை தயாரித்து வழங்க HAL விருப்பம் […]

Read More

ஏற்றுமதிக்கு வந்துள்ள இந்திய தயாரிப்பு RAWL – 03 ரேடார் ஜெர்மனி இங்கிலாந்து கனடா உள்ளிட்ட நாடுகள் வாங்க ஆர்வம்!!

January 5, 2022

இந்தியாவின் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் RAWL – 03 ரக ரேடார் தற்போது ஏற்றுமதிக்கு வெளிவந்துள்ளது. இது ஒரு முப்பரிமாண L அலைவரிசையில் இயங்கக்கூடிய 400 கிலோமீட்டர் தொலைவு தூரத்திற்கு வான் பரப்பை கண்காணிக்கும் ஆற்றல் கொண்ட ரேடார் ஆகும். இந்தியாவின் பெல் மற்றும் சுவீடன் நாட்டின் சாப் ஆகியவை இணைந்து தயாரித்த இந்த ரேடார் மீது பிரிட்டன், ஃபிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, கனடா, சுவீடன் மேலும் ஆஃப்ரிக்க மற்றும் தென் அமெரிக்க நாடுகள் ஆர்வம் […]

Read More

பாகிஸ்தான் பெற உள்ள ஜே-10சி போர் விமானங்களுக்கும் இஸ்ரேலுக்கும் உள்ள தொடர்பு !!

January 5, 2022

பாகிஸ்தான் சமீபத்தில் சீனாவிடம் இருந்து 25 ஜே-10 சி ரக போர் விமானங்களை இந்தியாவின் ரஃபேல் போர் விமானங்ஙளுக்கு போட்டியாக வாங்கி ஒரு புதிய படையணியை உருவாக்க உள்ளதாக அறிவித்தது. ஆனால் பாதுகாப்பு வல்லுனர்கள் இரட்டை என்ஜின், அதிநவீன சண்டையில் நிருபிக்கப்பட்ட ஏசா ரேடார் மற்றும் ஆயுத அமைப்புகளை கொண்ட ரஃபேலுடன் ஒப்பிடுகையில் ஒற்றை என்ஜின் மற்றும் நிருபிக்கப்படாத திறன்கள் கொண்ட J10C பின்தங்கிய விமானம் என கூறுகின்றனர். ஆனால் இதில் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் இந்த […]

Read More

ஒரிஜினல் கல்வானில் இந்திய கொடி சீனாவின் போலி கல்வான் வீடியோவுக்கு பதிலடி கொடுத்த இந்திய தரைப்படை !!

January 5, 2022

சமீபத்தில் புத்தாண்டு அன்று கல்வான் பள்ளதாக்கு பகுதியில் சீன தரைப்படை சீன தேசிய கொடியை ஏற்றியதாக கூறி ஒரு காணொளி ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியதை அனைவரும் அறிவோம். இந்த நிலையில் நேற்று காலை கல்வான் பள்ளதாக்கு பகுதியில் இந்திய தரைப்படையின் வீரர்கள் இந்திய தேசிய கொடியை ஏற்றிய புகைப்படம் தரைப்படையால் வெளியிடப்பட்டது. இந்த புகைபடத்தில் எங்கும் பனி படர்ந்து காணப்படுகிறது.ஆனால் சீனா வெளியிட்ட காணொளியில் ஆறு மட்டும் லேசாக உறைந்து காணப்படுகிறது ஆகவே இது பனிகாலத்தின் […]

Read More