Day: January 4, 2022

ரஷ்யாவுக்கு முதல்முறை வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் !!

January 4, 2022

உக்ரைன் அதிபர் வோலோடிமீர் செகன்ஸ்கியுடன் அமெரிக்க அதிபர் ஜோசப் பைடன் ரஷ்யாவின் ராணுவ படையெடுப்பு அச்சுறுத்தல் குறித்து பேச உள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைனுடைய க்ரைமியா தீபகற்ப பகுதியை கைப்பற்றிய நிலையில் தற்போது உக்ரைன் உடனான எல்லையோரம் மிகப்பெரிய அளவில் படைகளை குவித்துள்ளது. மேலும் சில நாட்கள் முன்னர் அமெரிக்கா இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நேட்டோ நாடுகள் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால் மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தன. குறிப்பாக […]

Read More

மீண்டும் இந்தியாவிடம் இருந்து 2 பிரம்மாஸ் அமைப்புகளை நிதி ஒதுக்க உள்ள ஃபிலிப்பைன்ஸ் அரசு !!

January 4, 2022

ஏற்கனவே ஃபிலிப்பைன்ஸ் அரசு அந்நாட்டு கடற்படைக்காக இந்தியாவிடம் இருந்து 3 பிரம்மாஸ் ஏவுகணை அமைப்புகளை வாங்க முதல்கட்டமாக 15% நிதியை ஒதுக்கீடு செய்ததை அறிவோம். இந்த நிலையில் ஃபிலிப்பைன்ஸ் அரசு மீண்டும் இரண்டு பிரம்மாஸ் ஏவுகணை அமைப்புகளை இந்தியாவிடம் இருந்து அந்நாட்டு தரைப்படைக்காக வாங்க நிதி ஒதுக்கீடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக முதல்கட்டமாக இரண்டு பிரம்மாஸ் ஏவுகணை அமைப்புகளின் ஒட்டுமொத்த மதிப்பில் 15 சதவிகித அளவிலான நிதியை அந்நாட்டு அரசு ஒதுக்கீடு செய்யலாம் […]

Read More

புதிய ஆண்டில் தேஜாஸின் சக்தியை அதிகரிக்கும் ஆயுத மேம்பாட்டு பணிகள் !!

January 4, 2022

இந்திய விமானப்படை ஏற்கனவே பிரம்மாஸ் ஏவுகணையை சுமக்கும் திறன் கொண்ட 83 தேஜாஸ் போர் விமானங்களை ஆர்டர் செய்த நிலையில் தற்போது பல்வேறு மேம்பாடுகளையும் முன்வைத்துள்ளது. அதாவது தேஜாஸ் போர் விமானத்தில் பல்வேறு புதிய ஆயுத அமைப்புகளை இணைத்து மேம்படுத்துமாறு இந்திய விமானப்படை ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திடம் கோரிக்கை வைத்துள்ளது. அந்த வகையில் பார்வைக்கு அப்பால் உள்ள இலக்குகளை தாக்க பயன்படும் முற்றிலும் இந்தியாவில் வடிவமைத்து தயாரிக்கப்பட்ட அஸ்திரா மார்க்-1 ஏவுகணை இணைக்கும் பணிகள் நடைபெற்று […]

Read More

இந்தோ பஸிஃபிக் பகுதிக்கு அடிக்கடி போர் கப்பல்களை அனுப்ப முடிவு செய்துள்ள ஜெர்மனி !!

January 4, 2022

ஜெர்மனி நாட்டு அரசு இனி அடிக்கடி இந்தோ பஸிஃபிக் பிராந்தியத்திற்கு தனது போர் கப்பல்களை அனுப்ப முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜெர்மன் கடற்படையின் ப்ரான்டென்பர்க் ரக ஃப்ரிகேட் கப்பலான பெயர்ன் 20 ஆண்டுகள் கழித்து தென் சீன கடல் பகுதியில் பயணித்தது குறிப்பிடத்தக்கது. இந்த கப்பல் 4,700 டன்கள் எடை கொண்ட நீர்மூழ்கி எதிர்ப்பு கலனாகும் மேலும் வான் பாதுகாப்பு மற்றும் கடல் பரப்பு போர் முறைகளிலும் செயல்படும் ஆற்றல் கொண்டது என […]

Read More

ஏவுகணை தாங்கிய ஹெரோன் ட்ரான்களை களமிறக்க மத்திய அரசு அனுமதி !!

January 4, 2022

பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான கேபினட் குழுவிடம் ஹெரோன் ஆளில்லா விமானங்களில் ஏவுகணைகளை பொருத்த அனுமதி கோரும் கோப்பு உள்ளது. 40 முதல் 50 மணி நேரம் வரை பறக்கும் திறன் கொண்ட இந்த ஆளில்லா விமானங்களில் ஏவுகணைகளை இணைத்து பயன்படுத்தினால் இந்திய ராணுவத்தின் வலிமை அதிகரிக்கும். ஆக இரண்டு அல்லது நான்கு தரை தாக்குதல் ஏவுகணைகளை நம்மிடம் உள்ள 48 ஹெரோன் ஆளில்லா விமானங்களில் இணைக்க ராணுவம் விரும்புகிறது, டாங்கி எதிர்ப்பு, பங்கர் அழிப்பு என […]

Read More

போர் விமானங்கள், அணுசக்தி நீர்மூழ்கிகள் வரிசையில் டாங்கிகளை இந்தியாவிற்கு விற்க முன்வந்துள்ள ஃபிரான்ஸ் !!

January 4, 2022

ரஃபேல் போர் விமானங்கள், அணுசக்தியால் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களை இந்தியாவுக்கு அளிக்க முன்வந்த ஃபிரான்ஸ் அந்த வரிசையில் தற்போது டாங்கிகளையும் தர முன்வந்துள்ளது. ஃபிரான்ஸ் நாட்டின் நெக்ஸ்டர் குழுமம் தயாரிக்கும் லெக்லர்க் ரக டாங்கிகளை தான் இந்தியாவுக்கு தர விரும்புவதாக ஃபிரான்ஸ் அரசு அந்நாட்டு பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதாவது இந்திய தரைப்படை தனது டி-72 டாங்கிகளுக்கு மாற்றாக சுமார் 1770 டாங்கிகளை எதிர்கால சண்டை வாகன திட்டத்தின் கீழ் வாங்க விரும்பி டென்டர் விடுத்துள்ளது. ரஷ்யா […]

Read More

ஜனவரி15 அறிமுகமாகும் தரைப்படையின் புதிய சண்டை சீருடை 2022 முதல் பயன்பாட்டிற்கு வரும் !

January 4, 2022

வருகிற ஜனவரி 15 ஆம் தேதி தரைப்படை தினத்தன்று தலைநகர் தில்லியில் நடைபெற உள்ள விழாவில் புதிய டிஜிட்டல் சண்டை சீருடை அறிமுகம் செய்யப்படுகிறது. இது அடுத்த ஆண்டு முதல் அனைத்து தரைப்படையினராலும் பயன்படுத்தப்படும் எனவும் தரைப்படை தலைமையக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தவிர வழக்கமான ஆலிவ் க்ரீன் அலுவல் சீருடைகளையும் மாற்றுவதற்கான பணிகளும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது இவை இரண்டும் இலகுவாக ஆனால் நீடித்து உழைக்கும் தன்மை கொண்டவையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More