ஸிர்கான் ஹைப்பர்சானிக் ஏவுகணையின் சோதனை வெற்றி ரஷ்ய அதிபர் வாழ்த்து !!

  • Tamil Defense
  • December 2, 2021
  • Comments Off on ஸிர்கான் ஹைப்பர்சானிக் ஏவுகணையின் சோதனை வெற்றி ரஷ்ய அதிபர் வாழ்த்து !!

கடந்த திங்கட்கிழமை அன்று ஸிர்கான் ஹைப்பர்சானிக் க்ரூஸ் ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக சோதித்துள்ளது இதனையடுத்து ரஷ்ய அதிபர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் அறிமுகப்படுத்தி வைத்த ஆறு புதிய தலைமுறை ரஷ்ய ஆயுத அமைப்புகளில் இந்த ஸிர்கான் ஹைப்பர்சானிக் க்ரூஸ் ஏவுகணையும் ஒன்றாகும்.

இந்த ஏவுகணை சோதனை வெள்ளை கடல் பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த அட்மிரல் கோர்ஷ்கோவ் ரக போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்டு சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்தது.

ஹைப்பர்சானிக் ஏவுகணைகள் ஒலியை விட சுமார் ஐந்து மடங்கு அதிக வேகத்தில் அதாவது மணிக்கு 6,200 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.