தேஜாஸ் மார்க்-2 டிசைன் இறுதி செய்யப்பட்டது 2023ல் தயாரிப்பு பணிகள் ஆரம்பம் !!

  • Tamil Defense
  • December 30, 2021
  • Comments Off on தேஜாஸ் மார்க்-2 டிசைன் இறுதி செய்யப்பட்டது 2023ல் தயாரிப்பு பணிகள் ஆரம்பம் !!

ஏற்கனவே இலகுரக தேஜாஸ் போர் விமானத்தின் மார்க்-1 ரகம் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டு வருகிறது இது தவிர மலேசிய அர்ஜென்டினா நாட்டு விமானப்படைகள் தேர்விலும் உள்ளது.

இந்த நிலையில் தற்போதைய மார்க்-1 நிலையிலிருந்து மார்க்-2 ரகத்தை நோக்கி இலகுரக தேஜாஸ் போர் விமானத்தின் பயணம் துவங்குகிறது இது இரட்டை என்ஜின் கொண்ட ஐந்தாம் தலைமுறை போர் விமானமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நவம்பர் 15ஆம் தேதி துணை விமானப்படை பணியாளர்கள் தளபதி ஏர் மார்ஷல் நம்தேஷ்வர் திவாரி தலைமையிலான குழு மார்க்-2 ரக தேஜாஸிற்கான டிசைனை இறுதி ஒப்புதல் வழங்கி உள்ளது.

இந்த வரலாற்று சிறப்புமிக்க முடிவை தொடர்ந்து 2023ஆம் ஆண்டு இந்தியாவிலேயே இந்த தேஜாஸ் மார்க்-2 ரக விமானத்தின் பணிகள் துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.