தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களுக்கான படையணியின் பெயர் அறிவிப்பு !!

  • Tamil Defense
  • December 5, 2021
  • Comments Off on தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களுக்கான படையணியின் பெயர் அறிவிப்பு !!

பூனேவை ஒட்டிய கதக்வாஸ்லாவில் அமைந்துள்ள தேசிய பாதுகாப்பு அகாடமி இந்திய முப்படைகளின் வருங்கால தளபதிகளை பயிற்றுவிக்கும் பிரமாண்ட பயிற்சி மையமாகும்.

இது உலகின் ஒரே முப்படை பயிற்சி மையமாகும். 12ஆம் வகுப்பு முடித்து தேர்வு, படைகள் தேர்வு வாரியத்தின் நேர்முக தேர்வு ஆகியவற்றில் வெற்றி பெறுவோர் இங்கு மூன்று ஆண்டுகள் பயிற்சி பெறுகின்றனர்.

மூன்று ஆண்டு பட்டப்படிப்பு மற்றும் அடிப்படை ராணுவ பயிற்சியை நிறைவு செய்யும் மாணவர்கள் பின்னர் தாங்கள் தேர்வு செய்த படைகளுக்கான அதிகாரி பயிற்சி மையங்கள் சென்று முழு ராணுவ பயிற்சி பெற்று அதிகாரியாக படையில் இணைகின்றனர்.

சமீபத்தில் இங்கு பெண்களுக்கும் அனுமதி அளிக்கும்படி இந்திய உச்சநீதிமன்றம் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு உத்தரவிட்டது. அதன்படி அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் பெண்களுக்கான பயிற்சி படையணிக்கு சீயெர்ரா என பெயரிடப்பட்டு உள்ளது ஏற்கனவே ஆல்ஃபா, ப்ராவோ, சார்லி, டெல்டா, எக்கோ, ஃபாக்ஸ்ட்ராட், கோல்ஃப், ஹன்டர்,

இன்டியா, ஜூலியட், கீலோ, லீமா, மைக், நவம்பர், ஆஸ்கார், பேந்தர் என 16 படையணிகள் உள்ளன. அவை ஸ்க்வாட்ரன் என அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.