இந்திய பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் உறுதியாக உள்ளோம்-அரசு !!

  • Tamil Defense
  • December 14, 2021
  • Comments Off on இந்திய பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் உறுதியாக உள்ளோம்-அரசு !!

பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது பதில் அளித்த பாதுகாப்பு இணை அமைச்சர் அஜய் பாட் இந்திய பெருங்கடல் பகுதியில் சுதந்திரமான கடல்வழி போக்குவரத்து வான் போக்குவரத்து ஆகியவற்றை இந்தியா ஆதரிப்பதாகவும்,

சுதந்திரமான வெளிப்படையான விதிகளுக்குட்பட்ட நடவடிக்கைள் முலமாக இந்திய பெருங்கடல் பகுதியின் பாதுகாப்பை பலப்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது எனவும் கூறினார்.

இந்திய கடற்படையின் கொல்லைபுறமான இந்திய பெருங்கடல் பகுதியில் சீன கடற்படையின் அதிகரித்து வரும் செயல்பாடுகளை சுட்டிக்காட்டி அவர் இப்படி பேசியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் UNCLOS கடல்சார் விதிமுறைகளுக்கு இந்தியா அதிக மதிப்பளிப்பதாகவும் அதின் உறுப்பு நாடு எனும் முறையில் இந்தியா சுதந்திரமான கடல்சார் நடவடிக்கைகளை ஆதரிப்பதாகவும் அவர் கூறினார்.