இனி இரஷ்ய தயாரிப்பு விமானங்கள் இந்திய விமானப்படையில் செயல்படுமா ?

  • Tamil Defense
  • December 8, 2021
  • Comments Off on இனி இரஷ்ய தயாரிப்பு விமானங்கள் இந்திய விமானப்படையில் செயல்படுமா ?

இந்திய விமானப்படை நெடுங்காலமாகவே இரஷ்ய தயாரிப்பு விமானங்களை தனது படையில் இணைந்து இயக்கி வருகிறது.

சுகாய்-7 , மிக்-21,23,25,27,29 , சுகாய் -30 என நெடுங்காலமாகவே இந்திய விமானப்படையில் இரஷ்ய தயாரிப்பு விமானங்கள் இருந்துள்ளன.

ஆனால் தற்போது சுகாய்-30 எம்கேஐ இந்திய விமானப்படையின் கடைசி இரஷ்ய தயாரிப்பு விமானமாக இருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதற்கு சில காரணங்களும் உள்ளன.

இரஷ்ய அடுத்த தலைமுறை 5ம் தலைமுறை விமானான Su-57/FGFA மேம்படுத்தி தயாரித்து வருகிறது.இதை இந்தியாவிற்கு வழங்க தயாராக உள்ளது.மேலும் இந்தியாவும் இந்த விமானங்களை வாங்க முன்வந்தது எனினும் இரஷ்யா விதிக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தொழில்நுட்ப பறிமாற்றம் தொடர்பான பிரச்சனைகளால் இந்த திட்டத்தை கிட்டத்தட்ட இந்தியா கைவிட்டு தனது சொந்த ஐந்தாம் தலைமுறை விமான தயாரிப்பில் முழு மூச்சில் இறங்கியுள்ளது.

Su-57 / FGFA

அடுத்ததாக இரஷ்யா PAK DP ஸ்டீல்த் குண்டுவீச்சு விமானத்தை மேம்படுத்தி வருகிறது.ஆனால் இரஷ்யா இதற்கான ” source code” ஐ இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளாவிட்டால் இதையும் இந்தியா பெறாது என்றே தோன்றுகிறது.

PAK DA

கடைசியாக சு-75 விமானத்தை இந்தியா பெற வாய்ப்பே இல்லை.

SU-75 checkmate