VLSRSM – செங்குத்தாக ஏவப்படும் குறுந்தூர வானிலக்கு ஏவுகணையின் சோதனை வெற்றி !!

  • Tamil Defense
  • December 8, 2021
  • Comments Off on VLSRSM – செங்குத்தாக ஏவப்படும் குறுந்தூர வானிலக்கு ஏவுகணையின் சோதனை வெற்றி !!

நேற்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் செங்குத்தாக ஏவப்படும் குறுந்தூர வானிலக்கு ஏவுகணை வெற்றிகரமாக ஒடிசா மாநிலம் சண்டிபூரில் உள்ள சோதனை மையத்தில் சோதனை செய்யப்பட்டது.

இந்த ஏவுகணை VLSRSAM – Vertical Launch Short Range Surface to Air Missile என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது இவற்றை கடற்படையின் போர் கப்பல்களில் பயன்படுத்தி கொள்வது தான் நோக்கமாகும்.

கடற்படையின் போர் கப்பல்கள் குறைந்த தூரத்தில் வரும் வான் இலக்குகளை தாக்கி அழித்து தங்களை அல்லது நட்பு கப்பல்களை குறிப்பாக விமானந்தாங்கி கப்பல்களை பாதுகாக்க இந்த வகை ஏவுகணைகள் உதவும்.

இந்த சோதனையை இந்திய கடற்படையின் மூத்த அதிகாரிகள் மூத்த DRDO விஞ்ஞானிகள் பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கண்காணித்து வெற்றியை உறுதி செய்தனர்.

இந்த செங்குத்தாக ஏவப்படும் குறுந்தூர வானிலக்கு அல்லது வான் பாதுகாப்பு ஏவுகணை சற்று தொலைவில் பறந்து கொண்டிருந்த இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்தது குறிப்பிடத்தக்கது.