
ரஷ்ய நாடாளுமன்ற கூட்டத்தில் அந்நாட்டு எதிர் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மிகைல் டெல்யாகின் ஒரு பரப்பரப்பான கருத்தை முன்வைத்தார்.
அதாவது உக்ரைன் அரசுக்கு விருப்பம் இல்லாத நிலையிலும் கூட மேற்கு நாடுகளின் ஏவல் மற்றும் அழுத்தம் காரணமாக ரஷ்யா மீது போர் தொடுக்கலாம் என கூறியுள்ளார்.
வருகிற ஆண்டு ஃபெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையிலான காலகட்டத்தில் க்ரைமியா,பெல்கோராட், ரோஸ்டோவ் டான் ஆகிய பகுதிகள் தாக்கப்படலாம் என கூறியுள்ளார்.
கடந்த மாதம் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கே லாவ்ரோவ் டான்பாஸ் பகுதி மீது உக்ரைன் தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை என கூறிவிட முடியாது என்றது குறிப்பிடத்தக்கது.