வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் மூலம் 80 ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் ஐக்கிய அரபு அமீரகம் !!

  • Tamil Defense
  • December 5, 2021
  • Comments Off on வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் மூலம் 80 ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் ஐக்கிய அரபு அமீரகம் !!

ஐக்கிய அரபு அமீரகம் தனது விமானப்படைக்கு சுமார் 80 ரஃபேல் எஃப்4 ரக போர் விமானங்களை வாங்கி ஃபிரான்ஸ் நாட்டுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

இந்த வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் வாயிலாக Rafale விமானங்களிலேயே அதிநவீனமான F4 ரகத்தை ஐக்கிய அரபு அமீரக விமானப்படை பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கான நிகழ்ச்சியில் அபு தாபி இளவரசர் அல் நஹ்யான் மற்றும் ஃபிரான்ஸ் அதிபன் எம்மானுவேல் மேக்ரான் ஆகியோர் கலந்து கொண்டனர்

அவர்கள் முன்னிலையில் டஸ்ஸால்ட் நிறுவனத்தின் தலைவர் எரிக் டாப்பியர் மற்றும் தவாசூன் பொருளாதார கூட்டமைப்பின் தலைவர் தாரீக் அப்துல் ரஹீம் ஆகியோர் கையெழுத்து இட்டனர்.

இதனையடுத்து ஃபிரான்ஸ் விமானப்படைக்கு பிறகு ஐக்கிய அரபு அமீரக விமானப்படை தான் இரண்டாவதாக Rafale F4 ரக போர் விமானங்களை பெற உள்ளது என்பதும்

இந்த ஒப்பந்தம் தான் ஃபிரான்ஸ் நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய பாதுகாப்பு ஏற்றுமதி ஒப்பந்தமாகும் மேலும் இந்தியா இந்த ரக விமானத்தை வாங்க விரும்பியதும் குறிப்பிடத்தக்கது.