
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற என்கவுன்டர் ஒன்றில் முக்கிய ஜெய்ஷ் பயங்கரவாதி ஒருவனும் பாக் வெடிகுண்டு நிபுணர் ஒருவனும் கொல்லப்பட்டனர்.
இது பற்றி பேசிய.காஷ்மீர் காவல்துறை ஐ.ஜி விஜய் குமார் கொல்லப்பட்ட ஜெய்ஷ் பயங்கரவாதியின் பெயர் யாசின் பர்ரே எனவும்,
கொல்லப்பட்ட மற்றொரு பயங்கரவாதி வெடிகுண்டு தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்றுவன் மேலும் அவன் பாகிஸ்தானை சேர்ந்த ஃபுர்கான் என்றார்.
இந்த என்கவுன்டர் புல்வாமா பகுதியில் உள்ள கஸ்பயாரில் நடைபெற்றது கொல்லப்ட்ட இருவரும் தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.