காஷ்மீரில் இரு இடங்களில் தொடர் பயங்கரவாத தாக்குதல்- வீரர் வீரமரணம்

காஷ்மீரில் 30 நிமிட இடைவேளையில் இரு இடங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு காவல் துறை வீரர் மற்றும் பொதுமக்களுள் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.ஸ்ரீநகரின் மெர்ஜான்போர் பகுதியில் நடைபெற்ற முதல் தாக்குதலில் ஒரு சிவிலியன் உயிரிழந்தார்.

ரூப் அகமது என்பவர் மீது பயங்கரவாதிகள் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதில் படுகாயமுற்ற அவர் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார்.

அனந்தநாக்கில் காவல் நிலையம் அருகே நடைபெற்ற மற்றொரு தாக்குதலில் காவல்துறை வீரரை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்கியுள்ளனர்.இந்த தாக்குதலில் படுகாயமுற்ற அவர் பின்பு உயிரிழந்தார்.

உயிரிந்த காவலர் அசிஸ்டன்ட் சப் இன்ஸ்பெக்டர் முகமது அஷ்ரப் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.படுகாயமடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இந்த இரு இடங்களிலும் தற்போது பாதுகாப்பு படைகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன.