காஷ்மீரில் முப்படைகளின் சிறப்பு படைகள் கூட்டு பயிற்சி !!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அதிக உயர பகுதிகளில் ஒரு சிறப்பு நடவடிக்கை குழுவை எல்லைக்கு அப்பால் களமிறக்கும் யுக்திகளை முப்படைகள் கூட்டாக மேற்கொண்டன.

இந்த பயிற்சியில் இந்திய தரைப்படை பாரா சிறப்பு படையினர் கடற்படையின் மார்கோஸ் விமானப்படையின் கருட் கமாண்டோக்கள் மற்றும் காலாட்படையினர் கலந்து கொண்டனர்.

இந்த பயிற்சியை தரைப்படையின் சினார் கோர் நடத்தியது. அப்படையின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் டி பி பான்டே நேரடியாக பயிற்சிகளை கண்காணித்தார்.

இந்த பயிற்சியின் மூலமாக முப்படைகள் இடையேயான ஒற்றுமை ஒருங்கிணைப்பு ஆகியவை பரிசோதித்து பார்க்கப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்தனர்.