மிகவும் தேடப்பட்ட பாகிஸ்தானிய பயங்கரவாதி அபு ஸரார் காஷ்மீரில் ராணுவத்தால் கொல்லப்பட்டான் !!

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தின் சூரன்கோட்டி பகுதியில் மிகவும் தேடப்பட்டு வந்த பாகிஸ்தான் பயங்கரவாதி அபு ஸரார் நேற்று ராணுவத்தால் கொல்லப்பட்டான்.

ராணுவ அறிக்கையின்படி பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிக்க முயலும்போது பாதுகாப்பு படையினர் திரும்ப சுட்டதில் இவன் கொல்லப்பட்டுள்ளான்.

இவனது கூட்டாளி தற்போது தப்பிய நிலையில் தெற்கு பிர் பஞ்சால் பகுதியில் பயங்கரவாதத்தை ஊக்குவித்து அமைதியை சீர்குலைக்கும் பாகிஸ்தானிய திட்டத்தின் ஒரு பகுதி தான் இவன் என கூறப்படுகிறது.

என்கவுன்டர் நடைபெற்ற இடத்தில் இருந்து ஒரு ஏகே-47 நான்கு மேகஸின்கள் ஒரு கையெறி குண்டு மற்றும் இந்திய பணம் கைபற்றப்பட்டு உள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த இரண்டு பயங்கரவாதிகளும் பல மாதங்களாக காட்டில் பதுங்கி இருந்த நிலையில் உணவு உடை மொபைல் ஆகியவற்றின் தேவை இவர்களை வெளியே வர வைத்துள்ளது.

அப்போது இவர்களின் மொபைல் ஃபோன் மூலமாக ட்ராக் செய்த ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் ஒதுக்குப்புறமாக நகர வைத்து பின்னர் ஆபரேஷன் நடத்தியுள்ளனர்.

பாதுகாப்பு படையினரின் ஆபரேஷன்களுக்கு பொதுமக்கள் மத்தியில் பலத்த ஆதரவு உள்ளதாகவும் தொடர்ந்து ரஜோரி பூஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் வெற்றி கிடைத்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.