உலகின் 100 முன்னனி ஆயுத நிறுவனங்களின் பட்டியலில் மூன்று இந்திய நிறுவனங்கள் !!

  • Tamil Defense
  • December 8, 2021
  • Comments Off on உலகின் 100 முன்னனி ஆயுத நிறுவனங்களின் பட்டியலில் மூன்று இந்திய நிறுவனங்கள் !!

உலகின் நூறு முன்னனி ஆயுத தயாரிப்பு நிறுவனங்களின் பட்டியலை ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு மையம் (SIPRI) வெளியிட்டு உள்ளது.

அந்த பட்டியலில் HAL, BEL, IOF ஆகிய மூன்று இந்திய நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன இவற்றின் மொத்த வியாபார மதிப்பு சுமார் 6.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும், மேலும் 100 நிறுவனங்களுடைய வியாபாரத்தில் இவற்றின் பங்கு 1.2% ஆகும்.

கடந்த ஆண்டை விடவும் இவற்றின் வியாபாரம் 1.7% அதிகரித்துள்ளது இதற்கு காரணம் அதிகப்படியான உள்நாட்டு ஆர்டர்கள் ஆகும் மேலும் இது தான் பெருந்தொற்று முடக்கத்தின் பாதிப்பில் இருந்து இவற்றை காப்பாற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் 42ஆவது இடத்திலும், பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் 66ஆவது இடத்திலும் இந்திய ஆயுத தொழிற்சாலைகள் 60ஆவது இடத்திலும் உள்ளன என்பது கூடுதல் தகவல் ஆகும்.