அதிநவீன தொழில்நுட்பங்களை ஊடுருவலுக்கு பயன்படுத்தும் பயங்கரவாதிகள் ஒரு பார்வை !!

  • Tamil Defense
  • December 23, 2021
  • Comments Off on அதிநவீன தொழில்நுட்பங்களை ஊடுருவலுக்கு பயன்படுத்தும் பயங்கரவாதிகள் ஒரு பார்வை !!

சமீபத்தில் இந்திய உளவுத்துறை ஜம்மு காஷ்மீர் வழியாக இந்தியாவுக்குள் நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் ஊடுருவ தயாராக உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையொட்டி கேரன் மச்சால் தாங்தார் பூஞ்ச் உள்ளிட்ட செக்டார்களில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதை ஒட்டி கண்காணிப்பு வலுப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் புதிய யுக்திகளை கையாண்டு பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பது கைதான பயங்கரவாதிகள் மற்றும் உதவியாளர்களை விசாரித்த போது தெரிய வந்துள்ளது.

அதாவது மொபைல் போனில் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உதவியுடன்ஒரு செயலி உருவாக்கப்பட்டு அதில் வழிகள் பதிவேற்றம் செய்யப்படும் இந்த வழிகாட்டி செயலியை பயன்படுத்தி

பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி வருகின்றனர் இப்படியான வழிகளை கைது செய்யப்பட்ட பயங்கரவாத உதவியாளர்கள் விசாரணையில் கக்கி உள்ளனர் மேலும் பயங்கரவாதிகளின் நடமாட்டங்கள் பற்றியும் தகவல் அளித்துள்ளனர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து காலகோட், ப்ரால் காலி, மன்ஜோட், காஸ் நாலா மற்றும் குர்செய்ன் ஆகிய பகுதிகளுக்கான பாதைகள் தற்போது அடையாளம் காணப்பட்டு உள்ளன இது மட்டுமின்றி ஐ.எஸ்.ஐ அமைப்பு பல்வேறு உதவிகளை அளித்து வருகிறது.

அத்தகைய ஒன்று தான் சிறிய க்ளைடர்கள் இவற்றால் 20 கிலோ எடையை சுமக்க முடியும் இவற்றை பயன்படுத்தி ஆயுதங்களை கடத்தி வருகின்றனர் என்பதும்,

சுமார் 8000 லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ மொஹம்மது அமைப்புகளின் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தங்கும் வசதியை பாகிஸ்தான் ஏற்படுத்தி உள்ளதும் தெரிய வந்துள்ளது.