
அமெரிக்க அரசு தயாரித்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் பெருந்தொற்று காலகட்டத்தில் இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து உள்ளதாகவும் ஜம்மு காஷ்மீரில் மட்டும் 37% சம்வங்கள் நடைபெற்று உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த தரவுகளில் 98 நாடுகளில் 10,172 சம்வங்கள் நடைபெற்று உள்ளதாகவும் இது 2019ஆம் ஆண்டை விடவும் 1300 சம்பவங்கள் அதிகம் எனவும் இந்தியாவில் நடைபெற்ற 679 தாக்குதல்களில் 567 பேர் உயரிழந்து உள்ளதகாவும் உலக அளவில் இது 2% எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்தியா உலகில் அதிக பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்ற முதல் நாடுகளின் பட்டியலில் இடம்பெற்று இருந்தாலும் இதனால் ஏற்பட்ட உயிர் இழப்புகளை சந்தித்த முதல் பத்து நாடுகளின் வரிசையில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் இடத்தில் ஆஃப்கானிஸ்தான் (1722 சம்பவங்கள்), இரண்டாம் இடத்தில் சிரியா (1322 சம்வங்கள்) மூன்றாவது இடத்தில் காங்கோ ஜனநாயக குடியரசு (999 சம்வங்கள்) உள்ளன.
இந்திய அளவில் ஜம்மு காஷ்மீர் 257 (37%) தாக்குதல் சம்வங்களால் முதலாவது இடத்திலும், சட்டீஸ்கர் 145 (21%) சம்வபங்களுடன் இரண்டாம் இடத்திலும், ஜார்கண்ட் 69 (10%) சம்வங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
மாவோயிஸ்டு அமைப்பு 298 தாக்குதல்களை நடத்தி 202 பேரை கொன்று உலகில் 4ஆவது பயங்கரமான இயக்கமாக உள்ளது 1 இடத்தில் தாலிபான்- ஹக்கானிகள், 2ஆம் இடத்தில் ISIS, 3ஆம் இடத்தில் அல் ஷபாப் ஆகியவை உள்ளன.
இந்திய அளவில் மாவோயிஸ்டு அமைப்பு 44% தாக்குதல்களுடன் முதல் இடத்தில் உள்ளது, லஷ்கர் இ தொய்பா மற்றும் ஹிஸ்புல் மூஜாஹீதின் ஆகிய அமைப்புகள் 6% தாக்குதல்களை நடத்தி உள்ளன, 29% தாக்குதல்கள் எந்தவொரு அமைப்பாலும் நடத்தப்படவில்லை என அந்த அறிக்கை கூறுகிறது.