மிக்21 போர் விமானத்திற்கு தேஜாஸ் மாற்று அல்ல பாதுகாப்பு அமைச்சகம் !!

  • Tamil Defense
  • December 22, 2021
  • Comments Off on மிக்21 போர் விமானத்திற்கு தேஜாஸ் மாற்று அல்ல பாதுகாப்பு அமைச்சகம் !!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜாஸ் இலகுரக போர் விமானம் ஏற்கனவே படையில் உள்ள மிக்-21 போர் விமானத்திற்கு மாற்று அல்ல என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்த பாதுகாப்பு துறை இணை அமைச்சர் அஜய் பாட் தேஜாஸ் போர் விமானங்கள் விமானப்படையை நவீனப்படுத்தும் நோக்கில் சேர்க்கப்படுவதாக கூறினார்.

கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வரை டெலிவிரி செய்யப்பட்ட 24 தேஜாஸ் போர் விமானங்களை தயாரிக்க சுமார் 6,653 கோடி ருபாய் செலவாகி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்திய விமானப்படைக்காக சுமார் 124 இலகுரக தேஜாஸ் போர் விமானங்களை தயாரிக்க ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து உள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலதிக தயாரிப்பு பணிகள் இந்திய படைகளிடம் அல்லது வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப்பெறும் ஆர்டர்கள் அடிப்படையில் தான் முடிவு செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.