
பாகிஸ்தான் ஆஃப்கானிஸ்தான் உடனான 2600 கிலோமீட்டர் நீளம் கொண்ட எல்லையோரம் பாதுகாப்பு வேலிகளை அமைத்து வருகிறது ஏற்கனவே 90% பணிகள் நிறைவடைந்த நிலையில்
தற்போது ஆஃப்கானிஸ்தான் தாலிபான்கள் நங்கர்ஹார் மாகாணத்தில் நடைபெற்று வந்த பணிகளை தடுத்து நிறுத்தி கட்டுமான பொருட்களை பறிமுதல் செய்து உள்ளனர்.
ஆஃகன் தாலிபான்கள் கூறும்போது பிரிட்டிஷ் கால எல்லை இரண்டு நாடுகளிலும் உள்ள உறவுகளை பிரித்த நிலையில் எந்த எல்லையோர வேலி அதனை மீண்டும் ஆழப்படுத்தும் என கூறுகின்றனர்.
தாலிபான்கள் மேலும் இனி எந்த விதமான கட்டுமான பணிகளையும் பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளக்கூடாது என எச்சரிக்கையும் விடுத்தள்ளனர்.
மேலும் பாகிஸ்தான் பகுதியில் இருந்து ஆஃப்கானிஸ்தான் நாட்டின் குனார் மாகாணத்தில் மோர்ட்டார்கள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதட்டம் அதிகரித்துள்ள நிலையில் ஆஃகன் தாலிபான்கள் தற்போது நிலைமை சீராகி உள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.