
தூரந்த் எல்லைப் பிரச்சனை காரணமாக தாலிபன்கள் மற்றும் பாக் இராணுவத்திற்கு இடையே மோதல் தொடர்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.ஆர்டில்லரி மூலம் இருபுறமும் சண்டை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த வெள்ளி அன்று 30 நிமிடம் தொடர்ந்து சண்டை நடந்தததுள்ளது.அதன் பிறகு தாலிபன் ஸ்னைப்பர் தாக்கியதில் இரு பாக் வீரர்கள் வீழ்த்தப்பட்டனர். பிறகு தற்போது மோதல் தொடர்ந்து வருகிறது.
ஆர்டில்லரி மூலம் தாக்கி இருபுறமும் சண்டை தொடர்ந்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.தூரந்த் எல்லையில் பாக் வேலி கட்டமைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.