100 க்கும் அதிகமான காவலர்கள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளை கடத்திய தாலிபான்கள் !!

  • Tamil Defense
  • December 1, 2021
  • Comments Off on 100 க்கும் அதிகமான காவலர்கள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளை கடத்திய தாலிபான்கள் !!

தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் ஆஃப்கானிஸ்தானில் சுமார் 100க்கும் அதிகமான காவலர்கள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளை கடத்தி உள்ளதாக HRW எனும் மனித உரிமை அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

முந்தைய ஜனநாயக ஆட்சியின் போது அரசு ராணுவம் காவல்துறை உளவுத்துறை ஆகியவற்றில் பணியாற்றிய ஆஃபகானியர்க ள தொடர்ந்து குறிவைப்பதாக தாலிபான்கள் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

இதற்காக முந்தைய அரசின் பல்வேறு துறை சார்ந்த பணியாளர்கள் பற்றிய தரவுகளை தாலிபான்கள் பயன்படுத்தி வருவதாகவும் அதனை கொண்டு பட்டியல் தயாரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.