
சுவீடன் நாட்டை சேர்ந்த நிறுவனமான SAABன் தயாரிப்பு தான் க்ரைப்பன் போர் விமானம், அதனை விற்க இந்தியாவை அணுகி உள்ளது.
அதாவது க்ரைப்பன்-ஈ ரக ஒற்றை என்ஜின் போர் விமானத்தை ரஃபேல் விமானத்திற்கான பாதி விலையில் தருவதாக அறிவித்துள்ளது.ஆனால் அளவில் பெரிய ரஃபேல் இரட்டை என்ஜின் விமானமாகும்.
இது தவிர தேஜாஸ் மார்க்-2 மற்றும் ஐந்தாம் தலைமுறை ஆம்கா போர் விமான திட்டங்களிலும் இந்தியாவுக்கு உதவுவதாகவும் சுவீடன் அறிவித்துள்ளது.
க்ரைப்பன்-ஈ போர் விமானத்தின் மார்கெட்டிங் அதிகாரி இதுபற்றி பேசும்போது 64 க்ரைப்பன்-ஈ போர் விமானங்களை 6.5 பில்லியன் யூரோக்கள் மதிப்பில் தருவதற்கும்,
அவற்றிற்கான ஆயுத அமைப்புகளை சுமார் 1.5 பில்லியன் யூரோக்களுக்கும், கூடுதலாக இரண்டு ஏவாக்ஸ் விமானங்களை 1 பில்லியனுக்கும் தர முன்வந்துள்ளது.
36 ரஃபேல் போர் விமானங்கள் மற்றும் அவற்றிற்கான ஆயுத அமைப்புகளை 7.8 பில்லியன் யூரோக்கள் மதிப்பிலும் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
ஒரு ரஃபேல் விமானத்தை ஆயுத அமைப்புடன் இந்தியா வாங்கிய போது 1820 கோடி ஆனது ஆயுதமின்றி ஒரு ரஃபேல் விமானம் 1633 கோடி ருபாய் ஆகும்.
இதுவே சுவீடனுடைய க்ரைப்பன்-ஈ ஆயுத அமைப்புடன் ஒரு விமானம் 1050 கோடியாகும் ஆயுத அமைப்பின்றி 853 கோடியாகும் ஆனால் க்ரைப்பன்-ஈ அளவில் சிறியது, அதிக ஆயுதங்களை சுமக்க முடியாது.
தற்போது இந்திய விமானப்படைக்கு சுமார் 114 பல்திறன் போர் விமானங்களை வாங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.