சர்வதேச எல்லையில் சந்தேகத்திற்கிடமான ஆளில்லா விமான நடமாட்டம்

  • Tamil Defense
  • December 12, 2021
  • Comments Off on சர்வதேச எல்லையில் சந்தேகத்திற்கிடமான ஆளில்லா விமான நடமாட்டம்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் கதுவா மாவட்டத்தில் சர்வதேச எல்லையை ஒட்டிய சத்பால் எல்லைப் புறக்காவல் நிலையத்திற்கு அருகே வெள்ளி மற்றும் சனிக்கிழமை இரவுகளில் சந்தேகத்திற்கிடமான ஆளில்லா விமானத்தின் செயல்பாடு பதிவாகியுள்ளதாக மூத்த பிஎஸ்எப் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த குழுவினர், ஆளில்லா விமானத்தின் ஓசையைக் கேட்டதையடுத்து, எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) ஜம்மு காஷ்மீர் போலீஸாரை எச்சரித்தது.

பிஎஸ்எப் மற்றும் காஷ்மீர் போலீசாரின் பல குழுக்கள் அப்பகுதியை சுற்றி வளைத்து, எல்லைக்கு அப்பால் இருந்து போதைப்பொருள் அல்லது ஆயுதங்களை வீசுவதற்குப் பயன்படுத்தப்பட்ட ட்ரோன் என்பதை அறிய அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.